health tips - 2026

அப்பாச்சி தீர்வு: இருதயநோய், நெஞ்சுவலி, மூச்சு திணறல், இரத்த மூலம், பெருமூச்சு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

இருதய நோய்கள் :

தேவையான அளவு செம்பருத்திப் பூக்களையும் அதற்கு சம அளவாய் வெண்தாமரை பூக்களையும் பறித்துக்கொள்ளவும். இவ்விரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு பங்கு நீர்விடவும். பாத்திரத்தை அடுப்பிலேற்றிக் காய்ச்சவும். கஷாயமிட்டு ஆறியதும் அதனுடன் தேனைக் கலந்து ஒரு டம்ளர் அளவு வீதம் தொடர்ந்து இருபதுநாள் அருந்திவர இருதய நோய்கள் அனைத்தும் அகலும்.

நெஞ்சுவலி அகல

வெங்காயத்தை உணவில் அடிக்கடி அதிகமான அளவில் உண்டுவர நெஞ்சுவலி அகலும். இருதயத்திற்கு மகிழ்ச்சிதரும் செய்திகளை நினைப்பதாலும், நினைக்கப் பண்ணுவதாலும் இதய வலிகள் குணமாகும்.

மூச்சுத்திணறல்

சர்க்கரைக் கிழங்கை தேனில் இழைத்து மூன்று வேளை உண்டுவர மூன்றே நாட்களில் எத்தகைய கடுமையான மூச்சுத்திணறலும் குணமாகும்.

தூதுவளைச் செடியின் பூக்களை பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி தினமும் இருவேளை காலை மாலை பருகிவர மூச்சுத்திணறல் குணமாகும்.

அதி சுவாசம் என்ற பெருமூச்சு

நாரத்தம் பழத்தின் தோலை நீக்கி சாறெடுத்து அதனுடன் திப்பிலியை தூளாக்கி கலந்து அருந்தி வரவும். 1 டம்ளர் வீதம் தினமும் காலை மாலை அருந்தி வர இரண்டே நாளில் அதிசுவாசம் குணமாகும்.

இரத்த மூலம்

5 மாதுளம் பூக்களை தண்ணீரில் அலசி சுத்தப்படுத்தி அம்மியில் வைத்து அரைக்க வேண்டும். பின்பு அதை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். காலையும், மாலையும் அந்த காயத்தில் அரை டம்ளர் அளவு எடுத்து ஏழு நாட்கள் தவறாமல் அருந்தி வர இரத்த மூலம் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + ten =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.