அப்பாச்சி தீர்வு: மலச்சிக்கல், சூடு, கூந்தல் வளர..!

Published:

health tips - 2026

மலச்சிக்கல்

அதிகாலை வேளைகளில் ஆகாரத்திற்கு முன்பு வில்வப் பழங்களில் காணும் விதைகளையும், கோந்து போன்ற பகுதிகளையும் நீக்கிவிட்டு மீதமுள்ள பழத்தை உண்டுவரவும். இவ்விதம் மூன்று நாள் உண்டுவர மலத்தை இளக்கி வெளியே தள்ளி மலச்சிக்கலை அகற்றும்.

பப்பாளிப் பழத்தில் காணப்படும் “பெப்சின்” எனும் திரவப் பொருள் ஜீரண சக்தியை ஊக்குவித்து உணவை ஜீரணிக்க வைக்கும் ஆற்றல் பெற்றது. ஆதலின் பப்பாளிப்பழத்தை தொடர்ந்து உண்டு வர மலச்சிக்கல் அகலும்..

ஐந்து ஆறு கொய்யாப் பழங்களை அதன் விதைகளோடு உண்டுவர இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் மலக்கட்டை உடைத்து மலத்தை இளக்கி வெளியே தள்ளி, மலச்சிக்கலை குணமாக்கும்.

வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி அளவு வீதம் எடுத்துக்கொள்ளவும். இரவு உணவு உண்டு படுக்கச் செல்லும் முன்பு வாயிலிட்டு சிறிது சூடாள தண்ணீர் அருந்தவும். காலை இரவு இரண்டு வேளையும் ஒருநாள் மட்டும் இவ்விதம் செய்திட மலச்சிக்கல் அகன்று சுலபமாய் வெளியேறும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மலச்சிக்கல், வெட்டை சூடு

விளக்கெண்ணை, பனங்கற்கண்டு, சீரகம் இவை மூன்றையும் சம அளவாய் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் பேயன் வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு சூரிய ஒளிபடும்படி கண்ணாடி பாத்திரத்தில் ‘ வைக்கவும். தினமும் காலை மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி எண்ணையுடன் ஒரு துண்டு பழத்தையும் உண்டுவர மலச்சிக்கல், வெட்டை சூடு அகலும்.

கூந்தல் வளர

சோற்றுக்கத்தாழையை இடித்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதோடு வெந்தயத்தையும் போட்டு ஊற வைக்க வேண்டும். அதில் முளை கண்டதும்
வெயிலில் நன்றாகக் காய வைக்கவும் பின்பு அதைத் தேங்காய் எண்ணையில் போட்டு தலைக்கு தேய்த்து வரவும். கூந்தல் நன்றாக வளரும்.

Related articles

Recent articles

spot_img