10 வயது சிறுமி! வகுப்பாசிரியரும், துணைமுதல்வரும்..கொடூரசெயல்!

இந்தியா கிரைம் நியூஸ்
vankodumai - 2026

தன்பாத்: ஒருத்தர் பள்ளியின் துணை முதல்வரும். வகுப்பு ஆசிரியரும். சேர்ந்து 4ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.

தன்பாத்தில் ஒரு பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போனது.

இதனால் அவளது பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவளை பரிசோதித்த மருத்துவர் பாலியல் கொடுமைக்கு குழந்தை ஆளாகி இருப்பதாக சொன்னார்கள். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர், குழந்தையிடமே இதை பற்றி விசாரித்தனர்.

அப்போது, ஒரு மாசத்துக்கு முன்பு பள்ளியில் தன்னை ஆசிரியர்கள் பலாத்காரம் செய்ததை சொல்லி அழுதுள்ளாள். சம்பவத்தன்று, திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்து உள்ளாள் சிறுமி. உடனே, வகுப்பு ஆசிரியர், ஓய்வு அறைக்கு செல்லுமாறு சொல்லி உள்ளார்.

அதன்படியே சிறுமியும், சென்றபோது, பின்னாடியே வந்த ஆசிரியர் ஒரு மாத்திரையை சிறுமிக்கு கொடுத்திருக்கிறார். அதை வாங்கி சாப்பிட்டதும், குழந்தை மயங்கி அங்கேயே விழுந்திருக்கிறாள். அப்போது, பள்ளியின் துணை தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் சேர்ந்து, அதே ரூமில் வைத்து சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கட்ராஸ் காவல்துறை, சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் துணை முதல்வர் மற்றும் பள்ளியின் செவிலியர் உட்பட 2 ஆசிரியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இதில் சிறுமியின் மருத்துவ ரிப்போர்ட் வந்ததும், விசாரணை தீவிரமாகும் என்று தெரிகிறது. இந்த கொடூரமான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.