ஆரோக்கிய சேது! ஆப் பினை வைத்து ஆப்பு வைக்க பார்க்கும் பாகிஸ்தான்!

arokiya sethu

கொரோனா நோய் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பான எச்சரிக்கை மற்றும் உதவிகளுக்காக `ஆரோக்கிய சேது’ என்ற மொபைல் செயலியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்தச் செயலி மூலம் கொரோனா நோய் பாதிப்புகள் குறித்த துல்லிய மற்றும் அதிகாரபூர்வ தகவல்களைப் பெறமுடியும். இந்த செயலியை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் ஆகியவற்றில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் சேவையைக் கொண்டு செயல்படுகிறது. இதை அனைத்துப் பொதுமக்களும் தங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்துகொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா
miltry

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் ஆரோக்கிய சேது' ஆப்பை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்தச் செயலியை அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள் என எல்லோரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தஆரோக்கிய சேது’ செயலியை இந்திய ராணுவத்தினரும் பதிவிறக்கம் செய்து இருக்கின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்புகள் அந்நாட்டு உளவுத்துறையின் உதவியோடு இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய சேது' செயலின் பயனர் பயன்பாட்டு கட்டமைப்பைக் கொண்டு அதேஆரோக்கிய சேது’ என்ற பெயரில் மற்றொரு போலி செயலி ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அந்தச் செயலியை இந்திய ராணுவத்தினரின் மொபைல்களில் சட்ட விரோதமாக திணித்து அவர்களை உளவு பார்க்கும் வேலைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

மேலும், இது குறித்து இந்திய ராணுவத்தினரை எச்சரித்துள்ள இந்திய ராணுவ தலைமை அதிகாரிகள், “ஆரோக்கிய சேது செயலியை இந்திய அரசின் அதிகாரபூர்வ வலைதளங்கள், ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ் இயங்கு தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும், ஒரு போதும் வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் மற்ற இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

முன்னதாக பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புடையவர்களை ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் முகாம் அமைத்து தங்கவைப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. தற்போது மீண்டும் போலி செயலியின் மூலம் இந்திய ராணுவத்தினரை உளவு பார்ப்பதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது இந்திய ராணுவத்தினரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இது பற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய அரசின் அதிகாரபூர்வ தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்வதுதான் பாதுகாப்பானது. பாகிஸ்தான் வடிவமைத்துள்ள போலி ஆரோக்கிய சேது செயலி இந்திய ராணுவத்தினர் சிலரின் மொபைல்களில் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். மேலும், அதன் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத்துறை இருப்பதையும் உறுதி செய்துள்ளோம். இன்னும் எத்தனை பேர் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories