தலைமை ஆசிரியர் திட்டியதால் 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
thukku 1
thukku 1

பள்ளி முதல்வர் அடித்ததற்காக, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

ஹரியானா மாநிலம் குருகிராமில், பள்ளி முதல்வர் திட்டியதற்காக 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காதணிகளை அணிந்தது,, மொபைல் போன் பயன்படுத்தியது, நகங்களை வெட்டாததற்காக மற்ற மாணவர்களுக்கு முன்னால் அந்த மாணவியை அந்த பள்ளி முதல்வர் திட்டியுள்ளார். மேலும் மற்ற மாணவர்கள் முன்னால் அவரை அடித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மாணவி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.. பள்ளி முதல்வர் திட்டிய மறுநாள், அதாவது கடந்த 9-ம் தேதி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரின் பெற்றோர், சிறுமியின் பள்ளிக்கு சென்று, பள்ளி முதல்வரை பார்த்து விட்டு வீடு திரும்பிய போது அவர்களுக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.