இனி நெடுஞ்சாலையில் பைக்கில் ‘விர்’ரென்று பறக்கலாம்! போலீஸ் பிடிக்காது!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

புது தில்லி:

பெரிய சாலைகள் மட்டுமல்ல, நெடுஞ்சாலைகளில் கூட 60 கி.மீ. வேகத்தில் பைக்கில் சென்றால், அதி வேகமாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் போக்குவரத்து போலீஸார் மடக்கிப் பிடித்து, அபராதம் போடுவது வாடிக்கை. நவீன ரக பைக் வாங்கி, பாதுகாப்புடன் ஹெல்மெட் போட்டுக் கொண்டு சாலையில் சென்றாலும், 55 கி.மீ. வேக வரையறையை மனத்தில் கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இனி இதற்கு தடை இல்லை. இது குறித்து மத்திய அரசு முடிவு செய்துள்ள புதிய யோசனையின் படி,

எக்ஸ்பிரஸ்வே எனப்படும் அதிவேக சாலைகளில் கார் வேகத்தை 100 லிருந்து 120 கி.மீ.ஆக உயர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

அது போல், நெடுஞ்சாலைகளில் செல்லும் காரின் வேகத்தை மணிக்கு 80கி.மீ இருந்து 100 கி.மீ.ஆக உயர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகன வேகத்தை 55லிருந்து 80 கி.மீயாக அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.