மோடிக்காக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த தாயார் ஹீராபென்

Published:

heeraben modi mother - 2026

மீண்டும் மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்ததற்காக அவரது தாயார் ஹீராபென் தனது நன்றிகளை வாக்காளர்களுக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார்

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெருமளவில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி கொடியை நாட்டி கொண்டிருக்கிறது! இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது இல்லத்தை விட்டு வெளியில் வந்து இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியாக வெற்றியைக் கொண்டாடினார்.

காந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் குவிந்திருந்த தொன்டர்களுடன் ஹிராபென் மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடினார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மூன்றாவது கட்ட தேர்தலின் போது தனது வீட்டிற்கு சென்று தன் தாயாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார் பிரதமர் மோடி.

அகமதாபாத் சென்றிருந்த அவர் மூன்றாவது கட்ட வாக்குப் பதிவின்போது காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கே தனது தாயாரை சந்தித்து அவருடைய ஆசி பெற்று அதன் பின்னர் வாக்களிக்கச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

வாராணசி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக இந்த முறை போட்டியிடுகிறார் மோடி. மிகப் பெரிய வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் வகித்துள்ளார்!

வாராணசி தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்று மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சூழல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் ஏழாவது கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது

முன்னதாக மோடியை எதிர்த்து காங்கிரசின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன ஆனால் இறுதியில் அஜய் ராய் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டார்!

Related articles

Recent articles

spot_img