கருவில் சுமந்த அம்மாவுக்காக வீதியில் இறங்கி பிச்சை எடுத்த 6 வயது சிறுமியின் சோகம்…..!

இந்தியா லைஃப் ஸ்டைல்

karnadaka 2 - 2026

கர்நாடக மாநிலம் கோப்பல் அருகே 6 வயது சிறுமி பிச்சை எடுத்து உடல் நலிவுற்ற தன் தாயை காப்பாற்ற போராடிய சம்பவம் பார்பவர்களை ஆழமாக பாதித்தது.

கர்நாடக, கோப்பல் பகுதியை சேர்ந்தவர் பாக்கியஸ்ரீ ( 6 வயது) ஏற்கனவே தந்தை கை விட்ட நிலையில், உடல் நலமற்ற தாயுடன் தெருக்களில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

பொதுவாக இந்த சிறு வயதில் மற்ற பிள்ளைகளுக்காக அவர்களது தாய் அரவனைத்து பாதுக்காக்கும் சூழலில் , பாக்கிய ஸ்ரீ தனது தாயின் பசிக்காகவும், உடல்நலக்குறைவுக்காகவும், தெருக்களில் பிச்சை எடுத்த காட்சிகள் பார்ப்பவர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியது .

இந்த நிலையை பார்த்த அப்பகுதி மக்கள் நல்லெண்ண அடிப்படையில் சில நல்ல உள்ளங்கள் படைத்த நபர்கள் சிலா் பாக்ய ஸ்ரீ யின் அம்மாவை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் கொண்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேலும் சிறுமியின் நிலையை குறித்து அறிந்த அம்மாநில அரசு தாய் மற்றும் சேய் நலவாரியம் இருவருக்கான வாழ்வாதாரம் குறித்த பொறுப்பை தானாக முன் வந்து ஏற்றுள்ளது,

இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.