ஏ.என் – 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

an32missing - 2026

இந்திய விமானப் படை விமானம் ஏ.என்-32வில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை சென்றடைந்த 15 பேர் கொண்ட மீட்புப் படையினர், அந்த இடத்தில் இருந்து எவரையும் உயிருடன் மீட்க வில்லை.

முன்னதாக, விமானத்தில் பயணத்தவர்கள் 13 பேரின் குடும்பத்தினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்திய விமானப்படையின் 15 பேர் கொண்ட மீட்புப் படையினர், விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே ஹெலிகாப்டர் மூலம் நேற்று இறக்கி விடப்பட்டனர்.

தொடர்ந்து அந்த விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் எடுக்கப் பட்ட படங்கள் இன்று வெளியாயின.

an 32 - 2026முன்னதாக, மலையேற்ற வீரர்கள் உள்ளிட்டவர்களுடன் விமானப் படையின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர்  ஜூன் 3 ஆம் தேதி விமானம் விபத்துக்குள்ளான அடர்ந்த காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்தினர். இதை அடுத்து விமானம் விபத்துக்குள்ளானதை உறுதி செய்த தேடுதல் குழுவினர், உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் விமானத்தின் கருப்புப் பெட்டி ஆகியவற்றை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

விமான விபத்து நேர்ந்த பகுதி விபத்துக்குள்ளான பகுதிமிக அடர்ந்த காட்டுப் பகுதி என்பதாலும், மலைப் பகுதியில் 12 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதாலும் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைய கால தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, விமான விபத்தில் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.