Computer - 2026

புதுச்சேரி சட்டப்பேரவையின் அனைத்து நடவடிக்கைகளையும், மின்னணு முறையில் நடத்துவது மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் கணினிமயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்று சட்டப்பேரவை செயலக பணியாளர்களுக்கு புதுச்சேரி அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை செயலர் உள்ளிட்ட ஏராளாமான அதிகாரிகள் பங்குபெற்றனர்.

சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் காகிதமில்லா பேரவை நடத்துவது தொடர்பாக கூறுகையில், பேரவையில் இம்முறையை அமுல்படுத்தும் போது,

பேரவை கூட்டத்திற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, அவற்றை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, ஆன்லைன் மூலம் பதில் பெறப்படும்.

பேரவையில் உறுப்பினர்கள் பேசுவதை அப்படியே மின்னணு முறையில் பதிவு செய்யவும், பேரவையில் ஓட்டெடுப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை உறுப்பினர்கள் மின்னணு முறையிலே கையாள முடியும்

அலுவல் ஆய்வு நடைமுறைகளை ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ளும் வசதியும் உருவக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் பணிகளின் நேரம் மற்றும் காகிதப் பரிமாற்றம் குறையும் என வின்சென்ட் ராயர் தெரிவித்தார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இதற்கிடையில், புதுச்சேரியில் வருகிற ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதால் இனி கால அவகாசம் வழங்க முடியாது என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார். இதனால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending