ajith nkp - 2026அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் நடிப்பில் அடுத்து வெளிவரயிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். தற்போது இந்தப் படம் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரங்கராஜ் பாண்டே அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக நடித்துள்ளார்.nkp - 2026தமிழ் சினிமாவிற்குள் இப்படத்தின் மூலம் நுழைகிறார் வித்யாபாலன். இதில் இவர் அஜித்திற்கு இணையாக நடிக்கிறார். மேலும் டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ஆதிக் ரவிச்சந்திரன் அபிராமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக ட்ரெய்லரின் கடைசியில் அஜித் பேசிய வசனம் ரசிகர்களில் ஆழ் மனதில் பதிந்துவிட்டது. அதனால் படம் எப்போது வெளியாகும் என்ற மிகுந்த ஆர்வத்தில் ரசிகர்கள் ஆவலாக இருந்து வருகின்றனர்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

ajithk - 2026இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், படத்தினை வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending