ரஜினி, பிரசாந்த் கிஷோர் சந்திப்பு! டோக்கன் 101 என ட்விட் செய்த ராமதாஸ்!

Published:

rajini 1 - 2026

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததாக வெளியான செய்திகளுக்கு நக்கலாக மறைமுகமாக டிவிட் போட்டுள்ளார் ராமதாஸ்.

RAMADAS 2 1 - 2026

நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தனது அரசியல் எண்ட்ரி குறித்து கேள்வி எழுப்பியவர்களின் வாயை, அரசியலுக்கு வரப்போவது உறுதி. எல்லாம் தயார் நிலையில் உள்ளது. அம்பு எய்ய வேண்டியது மட்டுமே பாக்கி என கூறி அடைத்துவிட்டார்.

prashanth kisore - 2026

இந்நிலையில் ரஜினிகாந்த், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு அரசியல் ஆலோசகராக திகழ்ந்து வெற்றிபெற செய்த பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. தற்பொழுது கமல்ஹாசனும் இவரது ஆலோசனையின் படியே நடக்கிறார்.

இதுக்குறித்து பாமக தலைவர் ராமாதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், நேற்றைய உரையாடலின் தொடர்ச்சியாக ”அண்ணே….பிரசாந்த் கிஷோரை பார்த்தீங்களா?”; ”இல்லப்பா அங்க நமக்கு முன்னாடி 100 பேர் கியூவில் நிற்கிறார்களாம். நமக்கு டோக்கன் நம்பர் 101 தான். அதான் அப்புறம் போகலாம்னு திரும்பிட்டேன் என பதிவிட்டிருந்தார்.

Related articles

Recent articles

spot_img