December 6, 2025, 9:08 PM
25.6 C
Chennai

சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது!: அர்ஜுன் சம்பத்!

sabarimalai supremecourt - 2025

சபரிமலை ஶ்ரீஐயப்பன் திருக்கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது ! என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில்…

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பு ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி அமைத்தும் மறுசீராய்வு மனு அங்கே விசாரிக்கப்படும் ! என்றும் ஐயப்பன் மலையின் புனிதம் கெடுக்கும் வகையில் பெண்கள் நுழையலாம் என்று கடந்த காலத்தில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பின் சாராம்சம் உள்ளது !

இதற்கு முக்கியமான காரணம் கேரள மாநிலத்தை காங்கிரஸ் கட்சி அரசாட்சி செய்து கொண்டிருந்தபொழுது ஐயப்பன் மலையின் புனிதம் காக்கும் வகையிலும் சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவாகவும் மாநில அரசாங்கத்தின் சார்பில் அபிடவிட் தாக்கல் செய்யப் பட்டது கேரளத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கம்யூனிஸ்ட் கட்சி கேரள அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றி அமைத்துக்கொண்டு ஐயப்பன் மலையின் புனிதம் கெடுக்கும் வகையிலும் ஐயப்ப பக்தர்களின் விரதத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் அபிடவிட் தாக்கல் செய்தார்கள் !

இதன் காரணமாகவே கடந்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் பெரும்பான்மை நீதிபதிகள் ஐயப்ப பக்தர்களுக்கு எதிராகவும் ஒரே பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மத விவகாரங்களில், வழிபாட்டு விவகாரங்களில், நீதிமன்றம் தலையிட முடியாது ஐயப்பன் மலையின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும்
என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது !

இந்த தீர்ப்பு வந்த உடனேயே கம்யூனிஸ்ட் அரசாங்கம் குறிப்பாக பினராயி விஜயன் அவர்கள் பெண் விடுதலை, பெண்ணியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நக்சல் அமைப்பைச் சேர்ந்த கடவுள் நம்பிக்கை இல்லாத இளம் பெண்களை எப்படியாவது மலையின் மீது ஏற்றி தீர்ப்பை செயல்படுத்தி காட்டுவோம் என்று சொல்லி தனிப்பட்ட முறையில் வெறுப்புணர்வுடன் அடக்குமுறையை ஐயப்ப பக்தர்கள் மீது பிரயோகித்தார்

மசூதி விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு கூம்பு வடிவ ஒலி பெருக்கி க்கு எதிராக இருக்கிறது அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பினரயி விஜயன் அரசாங்கம் தயாரில்லை அதேபோல திருவனந்தபுரம் பகுதியில் சர்ச் விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பினரயி விஜயன் அரசு தயாரில்லை

ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு புனிதமான சபரிமலையை போர்க்களமாக மாற்றி கடந்த ஆண்டு மிகப்பெரிய அராஜகம் அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டது சரண கோஷம் இட்ட ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டார்கள் ஒரு வழியாக கடந்த ஆண்டு இவ்வளவு தடைகளுக்கு மத்தியிலும் ஐயப்பன் மலையின் புனிதம் பாதுகாக்கப்பட்டது மிகவும் கீழ்த்தரமாக மோசமாக கேரள மாநில முதலமைச்சர் பினரயி விஜயன் நடந்துகொண்டார்

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த பினரயி விஜயன் அங்குள்ள நக்சல் அமைப்பைச் சார்ந்த பெண்களை சந்தித்து நீங்கள் அனைவரும் வாருங்கள் என்று சொல்லி அவர்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்து கேரளத்தில் நாங்கள் பெண்கள் நுழைய போகிறோம் என்று சொல்லி போராட்டம் நடத்துவதற்கு பினராயி விஜயன் தான் காரணம்

இந்த நிலையில் இந்த ஆண்டும் சபரிமலை போர்க்களமாக மாறக் கூடிய ஒரு சூழல் உருவாகி உள்ளது வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு ஐயப்ப மலை புனிதம் கெடுக்கக் கூடிய வகையிலே ஐயப்ப பக்தர்கள் அல்லாத விரதம் இருக்காத மது அருந்துகின்ற பெண்களை கெட்ட நடத்தை உடைய பெண்களை சந்நிதியிலே அழைத்துச் செல்வதற்கு உறுதுணையாக இருக்கப் போகிறது

ஐயப்ப பக்தர்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விடப் போகிறது வழக்கம்போல இந்து மக்கள் கட்சியும் ஐயப்ப பக்தர்களும் இணைந்து சபரிமலையின் புனிதம் காக்க அறவழிப் போராட்டங்களில் ஈடுபட இருக்கின்றோம்

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சொன்னால் சபரிமலை புனிதமான ஐயப்பன் சந்நிதி உள்ளிட்ட அந்த பகுதி முழுவதையும் மத்திய அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தன்னுடைய நிர்வாகத்திற்கு கொண்டுவர வேண்டும் இதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே இருக்கின்றது சபரிமலையின் பாரம்பரியம் நடைமுறைகள் கலாச்சாரம் இவற்றை காப்பாற்றிட நாடாளுமன்றத்திலே சிறப்புச் சட்டம் கொண்டுவர முடியும்

arjun sampath - 2025

கேரள மாநில முதலமைச்சர் பினரயி விஜயனின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர ஐயப்பன் மலையின் புனிதம் காக்க மத்திய அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ஐயப்பன் புனிதம் காக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் இந்த கோரிக்கையை மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி முன்வைக்கிறது

உலகெங்கிலும் இருக்கக்கூடிய கோடான கோடி ஐயப்ப பக்தர்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் எப்பொழுதும் போல விரதமிருந்து ஐயப்ப மலையின் நடைமுறைகளைப் பின்பற்றி நாங்கள் சந்நிதிக்கு செல்லுவோம் தீர்ப்பு எப்படி இருந்தாலும் உண்மையிலேயே ஐயப்பனை வழிபடுகின்ற ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தைச் சார்ந்த எந்த பெண்மணியும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மாறாக கம்யூனிஸ்ட் கட்சி திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் தூண்டிவிட்டு வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் செயல்படக் கூடிய ஒரு சில பெண்ணியவாதிகள் என்கின்ற போர்வையில் செயல்படுகின்ற தீய சக்திகள் தான் இத்தகைய செயலில் ஈடுபடுவார்கள் இதனை இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் முறியடிப்போம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றோம் இந்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது சபரிமலையின் புனிதம் காக்கும் போராட்டத்தில் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி ஈடுபடும்…. என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories