சாராய வியாபாரிக்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய எஸ்.ஐ.,! போட்டோ வைரலானதால் பணியிட மாற்றம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை தமிழகம்
police-officer-transfered
police-officer-transfered

சாராய வியாபாரியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட உதவி ஆய்வாளர் குறித்த போட்டோ சமூகத்தளங்களில் வெளியாகி சர்ச்சை ஆனதால், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் விஸ்வநாதன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அங்குள்ள மிட்டாளம் சாராய வியாபாரி அஜித் என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது, காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் அந்த சாராய வியாபாரிக்கு சால்வை அணிவித்து நட்பு பாராட்டியுள்ளார். மேலும் அவர் அந்த நபருக்கு கேக் ஊட்டிவிடும் புகைப்படங்களும் சமூகத் தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இது குறித்த விவரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி., உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆயுதப்படைக்கு மாற்றப் பட்டுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.