திமுக., கொடிகள்.. கருணாநிதி சிலை… ஒலிக்கும் பாட்டு – ”அழகென்ற சொல்லுக்கு முருகா..!”

Published:

karunanidhi-statue-opened1
karunanidhi-statue-opened1

கருணாநிதி,  ஸ்டாலின், பி.டி.ஆர்.ப. தியாகராசன் படத்தொடு அழகென்ற சொல்லுக்கு முருகா என்ற பாடல் கணீரென்று திமுக பந்தலில் ஒலித்துக் கொண்டு இருந்தது. பெரியார் திடலில் என்னடா முருகன் கோஷம் என்ற போது தெரிந்தது இன்று வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா வைபவம் என்பது! ஓட்டு படுத்தும்பாடு என்று சிரித்துக் கொண்டே கடந்து சென்றோம்… என்றார் ஒருவர். 

மதுரை சிம்மக்கல் பகுதியில் இரு தினங்களுக்கு முன் முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் சிலை ஒன்று திறக்கப்பட்டது. திமுக தற்போதைய தலைவர் மு க ஸ்டாலின் அந்த சிலையை திறந்து வைத்தார். வஉசி சிலை இருக்கும் இடத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து வ.உ.சி.யின் புகழை குலைக்கும் வகையில் இது இருப்பதாக பாஜகவினர் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர் 

இந்நிலையில் தற்போது அதே சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை அருகே ரேஷன் கடை ஒன்று திறக்கப்படுகிறது. திமுக எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் இந்த ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக அந்தப் பகுதியில் திமுக.,வினர் கொடிகளை கட்டி விளம்பரப் பலகைகள் வைத்திருக்கின்றனர். மைக்செட் ஆடல் பாடல் என்று வழக்கமான திமுக விளம்பரங்கள் உள்ளன 

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

அப்போது மைக் செட் பாடல்களை கேட்டு அருகில் இருந்தவர்கள் பெரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். காரணம் அழகென்ற சொல்லுக்கு முருகா என முருகன் பாடல்கள் அதில் ஒலித்துக் கொண்டிருந்தன. இப்போது தமிழக அரசியல் முருகனை மையமாக வைத்து சுற்றிக் கொண்டிருப்பதால் திமுகவினர் வேல் வாங்கிக்கொண்டு… முருகன் சிலைகளை வாங்கிக்கொண்டு… தாங்களும் முருக பக்தர்களைப் போன்று  வேடம் போட்டுக் கொண்டிருப்பதால் திமுக நிகழ்ச்சிகளில் முருகன் பாடல்கள் ஒலிப்பது இப்போது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது !

Related articles

Recent articles

spot_img