ஏற்றமும் ஏமாற்றமும் கலந்துள்ளது: பட்ஜெட் குறித்து சேம்பர் ஆஃப் காமர்ஸ் கருத்து

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள தமிழக பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், சிலவற்றுக்கு வரவேற்பு தெரிவித்தும், சிலவற்றுக்கு ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்… மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் சமர்ப்பித்துள்ள 2015-2016-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொழில் வணிகத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் வகையிலும் மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளமைக்காக எங்கள் பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பிற மாநிலங்களுடன் தமிழக வணிகம் அதிகரிக்கும். பிற மாநிலங்களுடன் தமிழக வணிகம் அதிகரிக்கும். தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு “ஊ” படிவம் பெற்று சரக்கை விற்றாலும் 3 சதவிகித உள்ளீட்டு வரி வரவை ரத்து செய்ய வேண்டும், “ஊ” படிவம் இல்லாமல் விற்றால் மிக உயர்வான உள் மாநில வரி விகிதங்களை விதிப்பதுடன் அப்பொருளுக்கான உள்ளீட்டு வரி வரவு முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என்ற இரட்டைத் தண்டனை ஆகிய சட்டப் பிரிவுகளின் காரணமாக தமிழக வணிகர்கள் வெளி மாநில வணிகர்களுடன் போட்டியிட முடியாமல் தங்கள் வணிகத்தையே சுருக்கிக் கொள்ள வேண்டிய நிலை இருப்பதை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக வரவு செலவுத் திட்ட முன் ஆலோசனையில் தெரிவித்திருந்ததை ஏற்று மேற்குறிப்பிட்ட இரண்டு உள்ளீட்டு வரி வரவு ரத்து சம்பந்தப்பட்ட சட்ட விதிகளை வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பது அனைத்திந்திய அளவில் நம் மாநில தொழில் வணிகர்கள் சிறப்பாக வணிகம் செய்ய உதவிகரமாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையிலும் வரவேற்கத்தக்க வரிச் சலுகைகள்: உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக வணிக வரி வருவாய் குறையும் என்பதாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை மாற்றத்தால் வணிக வரி வசூல் வரும் ஆண்டில் ரூ. 2,141 கோடி அளவிற்கு குறையும் என்பதாலும், 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான மொத்த நிதிப் பகிர்வு மற்றும் மானிய உதவிகளின் மொத்த அளவு வரும் ஆண்டில் ரூ. 1,531 கோடி குறையும் என்பதாலும் பெரும் நிதிப் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் அண்டை மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் புதிய வரி விதிப்புகளும், வரி உயர்வும் தவிர்க்க முடியாதது என்ற அச்சத்தில் இருந்த தொழில் வணிகத் துறையினரையும், பொது மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் எந்தப் புதிய வரி விதிப்பும், வரி உயர்வும் இல்லை என்று அறிவித்துள்ள முதலமைச்சரை மிகவும் பாராட்டுகிறோம். அதுமட்டுமல்லாது மின் உற்பத்தியை ஊக்குவிக்க உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வரி விலக்கு அளித்திருப்பதும், மீன்படி கயறுகள், மீன் வலை முறுக்கு நூல், கொசு வலை, நூலுக்குப் பசையிடும் ஒப்பந்தப் பணிகள் ஆகியற்றிற்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து முழுவிலக்கு அளித்திருப்பதும், ஏலக்காய், டுநுனு விளக்குகள், காற்றழுத்த கருவிகள், பத்து குதிரை திறன் வரையிலான மோட்டார் பம்புகள், கைபேசிகள் ஆகியவற்றிற்கு மதிப்புக் கூட்டு வரியை கணிசமாகக் குறைத்திருப்பதும் தொழில் வணிக வளர்ச்சியை குறிப்பாக சிறு தொழில் துறையை ஊக்குவிக்கும் சலுகைகளாகும். பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும்:  தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சிகளையும் சிறப்பு நகரங்களாக (ளுஅயசவ ஊவைநைள) மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரூ. 400 கோடி ஒதுக்கியிருப்பதும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்து உரிமங்களையும் எளிதில் பெற்று புதிய தொழில் துவங்க பெரிய தொழிற்சாலைகளைப் போல் ஒற்றைச் சாளர முதலீட்டாளர் இணைந்தளம் 2015-2016-ல் அறிமுகப்படுத்த விருப்பதும், புதிய தொழில் முனைவோருக்கு “தொழில் முனைவோர் மற்றும் தொழில் வளர்ச்சி மையம்” அமைக்கப்படவிருப்பதும், மின் துறைக்கு மொத்தம் ரூ. 13,586 கோடி ஒதுக்கியிருப்பதும், காவல் துறைக்கு முன் எப்போதையும் விட அதிக அளவில் ரூ. 5,568 கோடி ஒதுக்கியிருப்பதும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும். 2-வது பசுமைப் புரட்சி உறுதி: வேளாண்மைத் துறைக்கு எந்த ஆண்டிலும் இல்லாத அளவு இந்த ஆண்டு ரூ. 6,614 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், பயிர் கடனுக்காக ரூ. 5,500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும், பயிர் கடனை முறையாக செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் முறையாக செலுத்துவோருக்கு வட்டி இல்லை என்றும் அதற்காக வட்டி மானியம் ரூ. 200 கோடி ஒதுக்கியிருப்பதும், பல மாவட்டங்களில் வேளாண் பயிர்கள் வீணாவதைத் தடுக்க சேமிப்புக் கிடங்குகளும், குளிர் பதன கிடங்குகளும் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், நுண்ணீர் பாசன மானியத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கியிருப்பதும், அணைக்கட்டுகளை புனரமைக்கவும், மாநில நதிநீர் இணைப்பிற்கும் போதிய நிதி ஒதுக்கியிருப்பதும் தமிழகத்தில் 2-வது பசுமைப்புரட்சியை நோக்கி வேளாண் பெருமக்களை அழைத்துச் செல்லும் திட்டங்களாகும். ஏமாற்றம்:  தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சீரான தொழில் வளர்ச்சி ஏற்பட முயற்சிகள் எடுக்கப்படும் எனவும், அதற்கு சர்வதேச முதலீடுகளை வரவேற்கும் வகையில் வருகின்ற மே மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ள முதலமைச்சர், தொழில் துறையில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில் குறிப்பாக துரித தொழில் வளர்ச்சிப் பாதை என்று அறிவிக்கப்பட்டுள்ள மதுரை-தூத்துக்குடி உயர் சாலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் துவங்க வருவதற்கு மதுரை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிறைய விமானங்கள் வந்தாக வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என பட்ஜெட்டில் அறிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது. மொத்தத்தில். . . 2015-2016-ம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 9 சதவிகிதமாக இருக்கும் என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டும் வகையில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் பட்ஜெட் இது. – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories