4 இளைஞர்கள்.. 6 மாதம்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vankodumai
vankodumai

கடலூர் கே.என்.பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிறுமியின் தந்தை சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். தாய் கடலூரில் வேலை செய்து வருகிறார். இதன் காரணமாக சிறுமி மட்டும் கே.என்.பேட்டையில் உள்ள அவரின் பெரியப்பா வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் அந்த சிறுமியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

உடல்நலம் மோசமானது குறித்து அந்த சிறுமியிடம் அவர் பெரியப்பா விசாரணை செய்தபோது இந்த உண்மை வெளிவந்துள்ளது. இதனையடுத்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் சத்யசாய் நகர் மற்றும் மறை புது நகர் பகுதியை சேர்ந்த 19 வயது இரண்டு இளைஞர்களும், இருபத்தொரு வயது உடைய இரண்டு இளைஞர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

4 இளைஞர்கள் சேர்ந்து 15 வயது சிறுமியை 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.