images 2022 09 27T120403.404 - 2026

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

சற்றுமுன்
images 2022 09 27T120403.404 - 2026

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12 வரை நடப்பதால் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அக்டோபர் 6 முதல் 8 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி என அறிவிக்கப்பட்டு அக்டோபர் 9 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ம் தேதி வரையிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அரையாண்டு தேர்வு எப்போது?
1 முதல் 10ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு டிசம்பர் 19ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்றும், 11 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.