காலாவுக்காக கன்னடத்தில் பேசி கர்நாடக மக்களிடம் கெஞ்சும் ரஜினி!

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம்

rajini kanth - 2026

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் பேசும்போது, காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலா படம் ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் குறிப்பிட்ட காரணத்திற்காக படம் ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியானது இல்லை .

படத்தை பிரச்னையின்றி ரிலீஸ் செய்வதுதான் வர்த்தக சபையின் வேலை. அவர்கள் தடை விதிப்பது சரியில்லை. ஆனால் கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது…

காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதல் அமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

காலா படத்திற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை. உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா பட விவகாரத்தில் கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறியுள்ளார்.

காலா படம் வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேட்டியின் இறுதியில் கன்னடத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.