தமிழகத்தில் பரவலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு சோதனை!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

kovilpattiRTO office - 2026

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ.,) அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். டிரைவிங் லைசென்ஸ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்துவதாகக் கூறப் பட்டாலும், பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் கைமாறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

நெல்லை மாவட்டம், தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீடீரென சோதனை நடத்தி அங்கு உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tenkasi rto office - 2026

சேலம் மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரைக் கண்டதும் அங்கிருந்த புரோக்கர்கள் பணத்தை கீழே போட்டு விட்டு ஓடினர்.

புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் என உள்ளே புகுந்து, அலுவலக கதவுகளை மூடி, அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சூலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கோவையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் சோதனை நடக்கிறது.

திருவண்ணாமலை, கோவை, விழுப்புரம் ஆகிய மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.