கோமதிக்கும் ஆரோக்கிய ராஜிவுக்கும் பரிசு அறிவித்தது தமிழக அரசு!

Published:

edappadi palanisamy2 - 2026
ஆசிய தடகளப் போட்டிகளில் தங்கம் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் கோமதி மாரிமுத்து, ஆரோக்கியராஜிவ் இருவருக்கும் தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்த கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர் ஓட்டப் பந்தயப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற இருவரும் மென்மேலும் பன்னாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிகளைப் பெற தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img