குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பேச்சு

சற்றுமுன் தமிழகம்

குடிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், வழக்கமாக பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்து போனதே நிலத்தடி நீர் குறைய காரணமாக அமைந்தது. சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கி வரும் நான்கு ஏரிகளும் வறண்டு உள்ளன. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையை சுற்றியுள்ள கல்குவாரிகளில் இருந்தும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. தட்டுபாடு அதிகமாக் உள்ள இடங்களில் கூடுதல் லாரிகள் இயக்கி குடிநீர் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

1 thought on “குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பேச்சு”

  1. இவர்கள் முதலில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல் படுத்த வேண்டும். ஏரிகள் குளங்களை தூர் வார வேண்டும். ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவேண்டும். புதிய வீடுகள் அடுக்கு மாடி குடியிருப்புக்கு மழைநீர் சேமிப்பு என்பதை கட்டாயமாக்க வேண்டும். இவற்றை முறையாக செய்தால், வருண பகவான் மகிழ்ந்து மழையை பெய்ய வைப்பார். 24 மணிநேர மொபைல் செயலி, தொலைபேசி சேவை, தெர்மக்கோல் கொண்டு ஏரி ஆவியாவதை தடுத்தல் முதலியவை பிரயோஜனமில்லை. கல் குவாரிகளும் குட்டைகளும் வறண்டு போக எத்தனை நாளாகும்? இயற்கை வளங்களை ஒன்று விடாமல் சுரண்டி காசு பார்க்க வேண்டியது. பின்னர் மழை எப்படி பெய்யும்? தண்ணீர் பற்றாக்குறை எப்படி போகும்? தமிழக அரசு தான் பிரச்சினையை தீர்க்க வேண்டும். கடல் குடிநீர் திட்டத்தை முதல்வர் அறிவித்து மக்களின் தாகத்தை போக்குவாரா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.