செங்கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட சாகித்ய அகாதெமி எழுத்தாளர் ஆ.மாதவன் மறைவு!

madhavan
madhavan

ஆ.மாதவன் 1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தந்தை பெயர் ஆவுடைநாயகம் பிள்ளை. தாயார் செல்லம்மாள். ஆ. மாதவனின் தந்தையின் ஊர் இன்றைய தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை. தாயாரின் ஊர் நாகர்கோயில். இவை இரண்டுமே அந்நாட்களில் பிளவுபடாத திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தவை. அந்நாட்களிலேயே ஆவுடைநாயகம் பிள்ளை குடும்பத்துடன் திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்து விட்டார்.

ஆ.மாதவனின் தந்தை திருவனந்தபுரம் சாலை அங்காடியில் சிறுவணிகராக இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த ஆ.மாதவன் மேலே படிக்கவில்லை. திராவிட இயக்க ஆதரவாளராக எழுத ஆரம்பித்தார். அவரது முதல் கதை 1955ல் ’சிறுகதை’ இதழில் வெளியாகியது. பின்னர் மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியதளத்தில் செயல்படத் தொடங்கினார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி மோகபல்லவி. கடைத் தெருக்கதைகள் இவருக்குப் புகழைத்தேடித்தந்த தொகுப்பு!

ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர்ஸ் என்ற பாத்திரக் கடையை 75 வயது வரை நடத்திவந்தார். சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அவரது பெரும்பாலான கதைகள் அமைந்திருக்கின்றன. இதனால், கடைத்தெருவின் கதைசொல்லி என்று அவரது வாசகர்கள் அழைக்கின்றனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

1974ல் ஆ.மாதவனின் முதல் நாவலான ’புனலும் மணலும்’ வெளி வந்தது. கரமனை ஆற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. அந்நாவல் அதன் யதார்த்தத்துக்காகப் பெரிதும் கவனிக்கப்பட்டது.

1982ல் வெளிவந்த கிருஷ்ணப்பருந்து என்ற நாவல், ஆ.மாதவனின் புகழை மேலும் பரப்பியது. 1990ல் அவரது மூன்றாவது நாவலான ’தூவானம்’ வெளிவந்தது.

1974ல் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் என்ற குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002ல் சாகித்ய அக்காதமி வெளியீடாக மலையாள எழுத்தாளர் பி கெ பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டே என்ற நாவலை இனி நான் உறங்கட்டும் என்ற பேரில் மொழியாக்கம் செய்தார்.

மாதவனின் மனைவி பெயர் சாந்தா. இவர்களுக்கு 1966ல் மணமானது; கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்கள் கோவிந்தராஜன் என்ற மகன். 2002ல் மனைவியும் 2004ல் மகனும் மறைந்துவிட்டனர். மகளுடன் வசித்து வந்த மாதவன், இன்று காலமானார்.

ஆ.மாதவன் மறைவு குறித்து, திமுக., செய்தித் தொடர்பாளரும் மூத்த வழக்குரைஞரும் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில்…

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

படைப்பாளி ஆ.மாதவன் அவர்கள் ( 86 வயது) இன்று காலமானார். 1934-ல் பிறந்த இவர் திருவனந்தபுரம் சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அதிகமான சிறுகதைகளை எழுதியவர். அவர் கடைத்தெருவின் கதைசொல்லி என்று அழைக்கப் படுகிறார். அங்குள்ள பத்மநாபசாமி கோவில் அருகே இருந்த இவரின் கடையில் இரண்டு தடவை சந்தித்ததுண்டு. கதைசொல்லி பற்றி அடிக்கடி செல்பேசியில் விசாரிப்பார்.

7 சிறுகதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகிய குறிப்பிடத் தக்க படைப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

தமிழக அரசின் இயல் துறைக்கான 2007ஆம் ஆண்டு கலைமாமணி விருது ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு கட்டுரை நூலுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதினையும், 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றவர். ஆழ்ந்த அஞ்சலி… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories