இனி… டாக்டர் எடப்பாடியார்! கௌரவ பட்டம் வழங்கியது எம்.ஜி.ஆர்., பல்கலை!

Published:

dredappadi1 - 2026

எம்.ஜி.ஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்கள் பலருக்கும் அவ்வப் போது இது போன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

dredappadi - 2026

அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி சென்னை வேலப்பன்சாவடி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் முதலமைச்சர் எடப்பாஇ பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

edappadi doc - 2026

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Related articles

Recent articles

spot_img