ஆண்டாள் பற்றி மட்டுமா அவதூறு?; உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்: ஜீயரிடம் ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஆண்டாள் பற்றி மட்டுமா அவதூறு கிளப்பியுள்ளார் வைரமுத்து? திருவள்ளுவர், வள்ளலார், திருமூலர் என நாயன்மார்கள் குறித்தும்தான் தவறான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். எனவே ஒருங்கிணைந்த போராட்டம் தேவை; நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று ஜீயரிடம் வேண்டுகோள் விடுத்ததாக பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயரை பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 7 ஆம் தேதி ராஜபாளையத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், கவிஞர் வைரமுத்து, தெய்வப் பிறவி என இந்துக்கள் போற்றிக் கொண்டாடும் ஆண்டாளை அவதூறாகப் பேசினார். இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்பிரச்னையில், வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாளமாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 2வது நாளாக அவரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், ஜீயர் சுவாமிகளை பாஜக., தேசிய செயலர் எச்.ராஜா நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், வைரமுத்து ஆண்டாள் குறித்து மட்டும் அவதூறு கிளப்பவில்லை, திருவள்ளுவர் குறித்து பேசியுள்ளார். வள்ளலார், திருமூலர் என நாயன்மார்களின் கருத்துகளையும் திரித்துக் கூறியுள்ளார். எனவே வைரமுத்து விவகாரத்தில் இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நீங்கள் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று விண்ணப்பம் செய்கிறேன் என ஹெச்.ராஜா ஜீயரிடம் கூறினார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, வைரமுத்து சொன்னபடி, ஆண்டாள் குறித்து ஆராய்ச்சி நடத்தவில்லை என இண்டியானா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. வைரமுத்து மேற்கோள் காட்டிய அந்தக் கட்டுரையை எழுதிய நாராயணனும், தனது கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஒரு டிவி பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படி வைரமுத்து ஆண்டாள் குறித்து மட்டும் கூறவில்லை; திருவள்ளுவரை கொச்சைப் படுத்தியுள்ளார். தமிழ்த்தாத்தா குறித்தும் பாரதியார் குறித்தும் தவறான தகவல்களை வைரமுத்து பதிவு செய்துள்ளார். இப்படி தொடர்ந்து 14 கட்டுரைகள் எழுதினார். அவற்றில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தியும், சனாதனக் கொள்கைகள் குறித்த சந்தேகங்களை எழுப்புவது போல் துர்பிரசாரத்தையும் செய்துள்ளார். பொய்யான சந்தேக விதைகளை அவர் தூவுகிறார். முதலில் பெருமைகளை சொல்வது போல் சொல்லிவிட்டு கடைசியில் ஒருவரை இகழ்வதுதான் வைரமுத்து பாணி.

திருவள்ளுவர், தர்மார்த்த காம மோட்சம் என அறம் பொருள் இன்பம் வீடு என வீடுபேற்றைக் கூறியுள்ளார். ஆனால் மோட்சம் பற்றி திருவள்ளுவர் பேசவில்லை என வைரமுத்து பேசியது பொய். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் குறித்தும் தனது கட்டுரையில் தவறான தகவல்களை வைரமுத்து கூறியுள்ளார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

எனவே வைரமுத்து விவகாரத்தில் நீங்கள் மட்டும் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என ஜீயரிடம் வேண்டுகோள் விடுத்தேன். அவருக்கு நான் கட்டளை இட முடியாது. ஆனால் என் வேண்டுகோளை ஏற்று, அவர் நல்ல முடிவு எடுப்பார் என நினைக்கிறேன் என்று கூறினார் ஹெச். ராஜா.

1 COMMENT

  1. சினிமா பாடலாசிரியர்,வை மு. ஆராய்ச்சிகள்,எல்லாம்,இந்து சான்றோர்களை,
    தன் நாத்திக,தனித்தமிழ்நாடு,கொள்கைகளுக்குள் அந்தக்குப்பிக்குள்,
    அடைக்கவே முயற்சி,என்பதை ,இக்கால தமிழ்க்கூறும் நல்லுலகு,
    கவனிக்க வேண்டும்.
    ஹெசே,ராஜாவின் வேண்டுகோளை,ஜீயர்,ஏற்க,
    நாமும் வேண்டுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories