பற்றிய ‘தீ’ ; பரமனின் 65 ஆம் திருவிளையாடல்!

கடந்த பிப்.2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு கோபுரத்தை ஒட்டிய வீரவசந்தராயர் மண்டப பகுதியில் இருந்த வர்த்தகக் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இது சமூக மட்டத்தில் பெரும் அதிர்வலைகளையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைக்கு மறுப்பாக எழுதப் பட்ட கட்டுரை இது…

‘தீ’ 65வது திருவிளையாடல்!

கோயில் சொத்து எல்லாம் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட சொத்து இல்லை. பல அரசர்கள் மற்றும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள் அளித்தவையே. அந்தக் காலத்தில் நிர்வாக சீர்கேடுகள் ஏற்பட்டதால்தான் அரசு கையகப்படுத்தியதாக சு. வெங்கடேசன் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். மேலும் அவர் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற முறைகேடுகளால் தான் அதை பிரிட்டிஷ் ஆட்சியில் கலெக்டராக இருந்த பிளாக்பெர்ன், ஆதினத்திடமிருந்து மீட்டு  சிறப்பான புதிய நிர்வாகத்தை உருவாக்கினார் என்கிறார்.

ஆன்மீகத்தை வளர்க்க அரசர்களும் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களும் உருவாக்கி நிர்வகித்து வந்த கோயில்களில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டால், நிர்வாகத்தை மாற்றி அமைத்து சரி செய்திருக்கலாம். அப்படி இல்லாமல் அவர்கள் செயல்பட்டது கோயிலை வழிபாட்டு தலமாக பார்க்காமல் ஒரு வியாபார இடமாக பார்த்ததுதான் காரணம்.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

நமது நாட்டை ஆண்ட ஆங்கிலேயன், நம்மை அடிமையாக வைத்திருந்தான். நாம் அவனிடமிருந்து விடுதலை வேண்டினோம். அப்படி இருக்கும்போது அவன் நம் வழிபாட்டு இடத்தை பிடுங்கி ஒழுங்குபடுத்தினான் என்றால், அவனே நம் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தான் என்று அவனையே தொடர்ந்து ஆட்சி செய்ய விட்டிருக்கலாமே! இது வெங்கடேசனின் சறுக்கல்.

விருது பெறும் வகையில் சிறப்பாக மதுரை கோயில் நிர்வாகம் இருந்தது, பல வித புதுமைகளை செய்தோம் என்கிறார்கள். சரியாக இருக்கலாம். ஆனால் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஊர் மக்கள் கையில் நிர்வாகம் இருந்திருந்தால், இப்படி ஒரு விபத்தும் ஏற்பட்டிருக்காது, திருப்பதி கோயிலுக்கு இணையாக மதுரை கோயிலும் உருவாகியிருக்கும் என்பதே உண்மை.

மீனாட்சியம்மன் கோயிலின் தக்கார் கருமுத்து கண்ணன், ”25 லட்சம் ரூபாய்க்கு சென்று கொண்டிருந்த பிரசாதக் கடை டெண்டரை நிறுத்திவிட்டு கோயில் நிர்வாகமே பிரசாத விற்பனையில் ஈடுபட்டதால் ஆண்டுக்கு 2 கோடி வருமானம்” என்கிறார். மேலும் அதனைக் கொண்டு பல சேவைப் பணிகளை செய்கிறோம் என்பதாக கூறுகிறார்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

சரி. அப்படியென்றால் ஆன்மீக ஈடுபாடு கொண்ட பக்தர்களிடம் நிர்வாகத்தை கொடுத்து அரசும் கண்காணிப்பில் ஈடுபட்டால் இன்னும் அதிக அளவில் சேவையும் செய்ய முடியுமே. ஏன் மக்களை உடன் இணைத்துக்கொண்டு செய்யக் கூடாது? கோயில் வெறும் பணம் காய்ச்சி மரம் அல்ல.

தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 38,636 கோயில்கள் தமிழகத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் பல கோயில்கள் இன்று காணமல் போயுள்ளன. முறையாக வழிபாடு நடந்து வந்த, வருமானம் வரும் கோயில்களை மட்டும்தான் அறநிலையத் துறை கையகப்படுத்தியது. உண்டியல் இல்லாத கோயில்களை ஒருநாளும் நிர்வாகத்துக்குள் கொண்டு வந்ததில்லை அறநிலையத் துறை… என ஹெச். ராஜா சொல்கிறார்.

அறநிலையத்துறை வசம் உள்ள கோயில்களை ‘இந்து ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்து இயங்கும் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்’ 1985ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அரசால் உருவாக்கப்பட்ட கமிட்டி பரிந்துரைத்தது. அதைத்தான் இப்போது செயல்படுத்தச் சொல்கிறோம் என்று ஹெச். ராஜா சொல்வது கவனிக்கத்தக்கது.

கோயில் வியாபார இடமாகவோ, ஆன்மீகத்திற்கு தொடர்பு இல்லாத விதத்திலோ செயல்படுவதை ஏற்க முடியாது. கோயில் வருமானம் முழுவதும் ஆன்மீக விஷயங்களுக்கே பயன்படுத்தப்படவேண்டும். வேறு விஷயங்களுக்கு மடை மாற்றப்படுவது கூடவே கூடாது. மொத்தத்தில் கோயில் ஆன்மீகத்திற்காக; கோயில் சொத்தும் ஆன்மீகத்திற்காகவே.

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்த தீ விபத்து கவலை அளிக்கக் கூடிய விஷயம்தான். ஆனால் நல்லதொரு ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்னும் விதத்தில் இந்த நிகழ்வு மக்களுக்கு கோயில் சொத்தை காப்பாற்றுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.  ‘தீ’ 65வது திருவிளையாடல் எனலாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories