திருமாவளவன் தவறாகப் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: ஹெச்.ராஜா

Published:

h raja - 2026

மதுரை விமான நிலையத்தில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ரபேல் போர் விமானங்கள் குறித்து எதிர்க் கட்சிகள் வதந்தி பரப்பினார்கள்.

உச்ச நீதிமன்றம் இதில் முறைகேடு ஏதுவும் நடக்கவில்லை எனவும். சிபிஐக்கு மாற்ற தேவையில்லை எனவும் தீர்ப்பளித்தது. காங்கிரஸின் பொய்ப் பிராச்சாரத்தின் காரணமாகவே 5 மாநில தேர்தலின் முடிவுகள் இப்படி வந்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை விட வாக்கு அதிகம் பெற்றுள்ளது பாஜக.,!

திமுக சென்னையில் மாநகராட்சிக்கு வந்தவுடனே ஊழல் செய்தது.  குடும்ப அரசியலையும் ஊழல் அரசையும் திமுக மற்றும் காங்கிரஸ் செய்து வருகிறது.

இந்த நாட்டில் கூட்டணி இல்லாத ஆட்சிகள் அமைவதை விட பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்தால் மட்டுமே இந்தியாவிற்கு நல்லது செய்ய முடியும்.

திருமாவளவன் மற்றும் சுப வீரபாண்டியன் போன்றவர்கள் தான் ஆணவப் படுகொலைகள் நடக்கக் காரணம். திராவிட இயக்கங்களே இதற்குக் காரணம்.

திருமாவளவன் தவறாகப் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. வேண்டுமானால் வழக்கு தொடரட்டும்… என்று கூறினார் ஹெச்.ராஜா!

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img