இன்றும் தொடர்கிறது மழை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

Regional Meteorological Center 1 1 - 2026

உள் கர்நாடகம் முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுதும் கோவையில் மழை பெய்தது. அதேபோல் சேலம், பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.

இந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்தக் கோடை மழை காரணமாக மக்கள் தற்காலிகமாக கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்திருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.