முகநூலில் ஆரம்பித்த காதல்! முகம் பார்த்ததும் ஏற்பட்ட மோதல்!

கோவை சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
03 July11 Facebook - 2026

ஃபேஸ்புக்கில் கடந்த சில மாதங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்த காதல் ஜோடி, நேரில் பார்த்தவுடன் திடீரென காதல் முறிவடைந்த சம்பவம் பெரும் வேடிக்கை நிகழ்வாக உள்ளது

திருவள்ளூரை சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவரும் கோவை கல்லூரி மாணவி ஒருவரும் பேஸ்புக்கில் ஒருவரை ஒருவர் பாராமல் பழகி வந்தனர்

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி தங்களுடைய புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இருவரும் அனுப்பிய புகைப்படங்கள் ஸ்டைலாகவும் அழகாகவும் இருந்ததால் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்வாக நேரில் சந்திக்க முடிவு செய்தனர்

இதனை அடுத்து கோவைக்கு வந்த அந்த இளைஞர் அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்கே நேரில் சென்று அவரை பார்த்தார். அந்த இளைஞரை நேரில் பார்த்த கல்லூரி மாணவி அதிர்ச்சி அடைந்தார்

lovers fight - 2026

பேஸ்புக்கில் நீங்கள் அனுப்பிய புகைப்படத்தில் உள்ளது போல் நேரில் இல்லையே என்று அவர் ஏமாற்றத்துடன் கேட்க, அந்த இளைஞரும் ‘ஆமாம் நானும் எதிர்பார்த்த மாதிரி நீ இல்லை’ என்று கூறியிருக்கிறார் இருவருக்கும் இடையே சண்டை சச்சரவு ஏற்பட்டு உள்ளது

இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர். பேஸ்புக்கில் பல மாதங்களாக காதலித்த இந்த ஜோடி, நேரில் பார்த்த அடுத்த நொடியே தங்கள் காதலை முறித்துக் கொண்டது பலருக்கும் ஒரு வேடிக்கை வினோத நிகழ்வாக உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.