நாகூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: ஒருவர் கைது!

Published:

nia - 2026

தமிழகத்தில் கோவை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் நாகூரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவையில் லாரிப்பேட்டையில் சவுரிதீன் என்பவர் வீட்டிலும், ஜி.எம்.நகரில் நிஷார் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் 5 பேர் சோதனை நடத்தினர்.

நாகூர் மியாந்தெருவில் ஏடிஎம் என்ற தனியார் காலனியில் வாடகைக்கு குடியிருக்கும்
முஹம்மது அஜ்மல் என்பவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மியாந்த் தெருவில் உள்ள முகமது அஜ்மல் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதை தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த நூர் முகமது என்பவரது மகன் சிராஜூதீன்(20). இவர் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொலைபேசி மூலம் பேசியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

Related articles

Recent articles

spot_img