டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி… பின்னணியில் நடந்தது என்ன?!

Published:

hindumakkalkatchi3 - 2026

நேற்று 17 .11 .18 ஞாயிறு மாலை மணிக்கு மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நகர்ப்புற நக்சல் T M கிருஷ்ணாவின் கச்சேரி மும்பையைச் சேர்ந்த தேவிநாத் தத் என்ற பெண்மணியால் ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்து அவரை அழைத்துப் பேசினேன். இரு தினங்களாக திரு.கிருஷ்ணா சங்க / பரிவார் கார்யகர்தர்கள் எப்போதெல்லாம் கொலை செய்யப்படுவார்களோ அப்போதெல்லாம் நான் மகிழ்ச்சி அடைவேன் எனப் பேசியுள்ளதாக SOCIAL MEDIA வில் வந்து கொண்டிருக்கிறது. இந்து சம்பிரதாயத்தைக் கிண்டலடிக்கிறார். எனவே நிகழ்கியை ரத்துசெய்ய வேண்டுகிறேன் என எடுத்துச்சொல்லியும் அழிச்சாட்டியமாக நடத்தியே தீருவேன் என்றார். நீங்கள் நிகழ்ச்சி நடத்தினால் நான் அமைதியான வழியில் சத்யாகிரஹம் செய்வேன் என்றேன்.

இந்து மக்கள் கட்சி ராம. ரவிக்குமார் அந்த நேரம் அழைத்து இது தொடர்பாக பேசினார். நாம் R R சபா நிர்வாகியைப் பார்த்து மனு அளிப்போம், அவர்கள் ஒத்துழைப்பார்கள் என சொல்லி அவர்களிடம் சந்திக்க வருகிறோம் என்றார். அவர்கள் வர சொன்னதன் பேரில் 3 15 மணி அளவில் மயிலாப்பூர் சபாவிற்கு சென்றோம். அப்போதுதான் சபா காரியதரிசி சாப்பிட சென்று உள்ளேன் 10 நிமிடத்தில் வருவதாக போனில் சொன்னார். ஆனால் அதற்குள் மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் வந்து எங்களை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றார்.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

தகவல் கேள்விப்பட்டு சபா நிர்வாகிகள் மயிலாப்பூர் காவல் நிலையம் வந்தனர்.எங்கள் சம்மதத்துடன் மட்டுமே நாங்கள் வந்துள்ளதாக போலீசிடம் தெரிவித்தனர். இதற்கிடையே மும்பை பெண்மணி காவல் துறை அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். மேல் அதிகாரியிடம் இருந்து போன் வந்ததால் எங்களை ரிமாண்ட் செய்யும் நோக்கிலேயே குறியாய் இருந்தனர்.

சபா காரியதரிசியிடம் புகார் அளிக்க இன்ஸ்பெக்டர் மற்றும் அசிஸ்டன்ட் கமிஷனர் துடியாய் துடித்து புகார் கொடுக்க மிகவும் வற்புறுத்தினர். ஆனால் காரியதரிசிகள் நம் செயல்பாட்டை முழுமையாக ஆதரித்து நம் பக்கம் நின்றதால் போலீஸ் நினைத்தது நடக்கவில்லை. இதில் மேலும் கோபம் அடைந்த போலீஸ் கைதான 7 பேரிடமும் கடுமையாக நடக்க ஆரம்பித்து செல்போன் பயன் படுத்தக் கூடாது என சொன்னார்.

அப்படி எனில் எங்களை செல்லில் ஜட்டியுடன் வையுங்கள் என எதிர்க்க ஆரம்பித்த உடன் வேறு சில்லுண்டித்தனமான செயல்களை காவல் துறை செய்தது.

நியூஸ் 7 ராம. ரவிக்குமாரை பேட்டி எடுத்த போது பேட்டி கொடுக்கக் கூட காவல் துறை அனுமதிக்க வில்லை. சபாவிடம் ஏற்கனவே அனுமதி பெற்று நேரில் சந்திக்கவோ, பேட்டி கொடுக்கவோக் கூட அனுமதிக்காமல் நாய் பிரியாணி கடத்தல் காரன் குண்டு வைக்கும் பாகிஸ்தான் காரன் போல் காவல் துறை எங்களை நடத்தியது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

எவ்வளவோ வற்புறுத்தியும் சபா நிர்வாகிகள் புகார் கொடுக்காததால் கடுப்படைந்தது போலீஸ். சபா நிர்வாகம் மும்பை பெண்மணியை அழைத்து ஹிந்துஸ்தானி கச்சேரி என சபாவை FIX செய்துவிட்டு எப்படி கிருஷ்ணனை அழைக்கலாம் என சபா நிர்வாகிகளும் மல்லுக்கு நின்றனர்.

கடைசியில் அப் பெண்மணி கேஸை வாபஸ் வாங்குவது, எங்களை வழக்கில்லாமல் விடுவிப்பது, கிருஷ்னா கச்சேரிக்கு முன் அவரின் செயல்பாட்டை நாங்கள் துளியும் ஏற்கவில்லை என கச்சேரிக்கு நடுவில் பேசி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது என முடிவு செய்து சுமார் 7 மணியளவில் விடுவிக்கப்பட்டோம். சபாவில் அதன் நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த போது இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் அவர்களும் மேடையில் இருந்தார்.

இதன் பின்னணியில் நான் சந்தேகிப்பது

1 நிகழ்ச்சியை நடத்தும் அப்பெண் யார்?
2 அவர் பின்னணியில் இருப்பது யார் யார்?
3 யாரோ இடும் கட்டளையை நிறைவேற்றும் இப் பெண்ணுக்கு ஆதரவாக காவல் துறை அடிபணிவது ஏன்?
4 அந்த நபரின் பின்னணி என்ன?
5 கர்நாடக சங்கீதத்திற்கும் இந்து ராமுக்கும் என்ன, எப்போதிலிருந்து தொடர்பு?

ALSO READ:  கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

சுமார் 3 மணியளவில் நான் ரவிகுமாருடன் சபாவிற்கு சென்ற போது கருப்பு சட்டை ஜீன்ஸ் பேண்ட்டில் சில இளைஞர்கள் இருந்தனர். எங்களுடன் இருந்த போலீஸ் அவர்களை அப்புறம் வாங்க என அனுப்பியவுடன் அடுத்த நொடி சபாவிற்குள் போய்விட்டனர். தங்களை ரோட்டரி கிளப் என அறிமுக படுத்திக்க கொண்டனர். காவல் துறைக்கும் அந்த நபர்களுக்கும் உள்ள உறவு என்ன?

இந்த முடிச்சை அவிழ்த்தால் கண்ணுக்குத் தெரியாமல் இயங்கி நம் பண்பாட்டை அழிக்க நினைக்கும் சக்தியை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இந்தக் கூத்துக்கள் முடியும் போது “என்ன கோர்ட்டுக்கு கைது” என ஒருவர் போனில் கேட்டார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img