காதல் ஜோடி பதிவிட்ட வீடியோ! அதிர்ச்சியில் பெற்றோர்!

Published:

Couple - 2026

பஞ்சாப் மாநிலத்தில் காதலர்கள் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சங்ரூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் அரவிந்தர் சிங்க். இவர் பக்கத்து ஊரில் வசித்து வந்த ஹர்பன்ஸ் கவுர் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்பன்ஸ் கவுர் மற்றும் அரவிந்த் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

love jodi - 2026

இந்நிலையில் இருவரையும் காணாமல் பெற்றோர்கள் தேடி வந்த நிலையில் அரவிந்தின் தோட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அரவிந்த் மற்றும் ஹர்பன்ஸ் கவூர் இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அரவிந்தின் தந்தை இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறையினர் அவர்களுடைய செல்போனை ஆய்வு செய்தபோது ஹர்பன்ஸ் கவூர் தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ எடுத்துள்ளார். மேலும் அதனை தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

அதனை தொடர்ந்து ஹர்பன்ஸ் மன்னிப்பு கேட்ட உடன் அவரை அரவிந்த் சிங் சுடுகிறார். அவர் இறந்ததும் அரவிந்தன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
.

Related articles

Recent articles

spot_img