spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?இண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்! நவ.1 முதல் அமல்!

இண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்! நவ.1 முதல் அமல்!

- Advertisement -
cylinder
cylinder

இண்டேன் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளது. வரும் நவ.1ம் தேதி முதல் அந்த எண் அமலுக்கு வருகிறது.

இண்டேன் (Indane) எரிவாயு வாடிக்கையாளராக இருந்து, ஒவ்வொரு மாதமும் தொலைபேசியில் சிலிண்டரை முன்பதிவு செய்பவராக இருந்தால், தற்போது இண்டேன் நிறுவனம், கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் எண்ணை மாற்றியுள்ளது என்பதையும், புதிய எண்ணையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இது குறித்து இண்டேன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு SMS மூலம் சிலிண்டர் முன்பதிவின் தொலைபேசி எண் மாற்றம் குறித்து தகவல் அளித்துள்ளது.

அதில், Indane IVRS number has changed to 7718955555. Call from your registered phone to book a refill. You can also update phone number on IndianOil One App. என்று தகவல் அனுப்பப் பட்டுள்ளது.

அதாவது, தனது வாடிக்கையாளர்களிடம், ‘இப்போது நீங்கள் 7718955555-யை அழைப்பதன் மூலம் எரிவாயுவை முன்பதிவு செய்யலாம்… என்று இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக இண்டேன் வாடிக்கையாளர்கள் 9911554411- என்ற எண்ணை அழைப்பதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து வந்தனர்.

நீங்கள் தொலைபேசி அழைப்பு மூலம் எரிவாயு முன்பதிவு செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் (Whatsapp)-யையும் பயன்படுத்தலாம். அது இன்னும் எளிதானது. நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் 7588888824. WhatsApp-ல் REFILL என டைப் செய்து 7588888824 என்ற தொலைபேசி எண்ணை அனுப்பவும். முக்கியமாக, நீங்கள் செய்தி அனுப்பும் தொலைபேசி எண், இண்டேன் டீலரிடம் பதிவு செய்யப்பட்ட உங்களது எண்ணாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வசதியின் பலனைப் பெற முடியும்.

நவம்பர் முதல் OTP அமைப்பு

எரிவாயு சிலிண்டர்களை வீட்டுக்கு வழங்குவதற்கான விதிகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது நவம்பர் 1, 2020 முதல் கேஸ் சிலிண்டர் வீடுகளுக்கு விநியோகிக்கப் படுவதில், உங்களுக்கு டெலிவரி அங்கீகாரக் குறியீடு (Delivery Authentication Code) தேவைப்படும், அதை நீங்கள் ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் கூற வேண்டும். எரிவாயு திருட்டைத் தடுக்கவும் சரியான நுகர்வோரை அடையாளம் காணவும் எண்ணெய் நிறுவனங்கள் புதிய முறையை செயல்படுத்துகின்றன.

நுகர்வோரின் மொபைல் எண் புதுப்பிக்கப் படாவிட்டால், டெலிவரி மேன் தனது எண்ணை ஒரு செயலி (App) மூலம் உடனடியாக புதுப்பித்து குறியீட்டை உருவாக்குவார். இது வீடுகளுக்கான எரிவாயு சிலிண்டர்களுக்கு மட்டுமே! வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு அல்ல!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe