‘விடியல் ஆட்சி’யில் கோயிலுக்கு வந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை! கண்டித்த ராமதாஸ்!

Published:

stalin ramadoss
stalin ramadoss

கேரள மாநிலம் கண்ணூர் அரசு மருத்துவமனையில் 40 வயதுப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்தபோது மூன்று பேர் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், உடனே கண்ணூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதை அடுத்து அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீஸார், அந்தப் பெண் கூறியதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 19ஆம் தேதி பழனிக்கு தானும் தனது கணவரும் சென்றதாகவும், பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, தனது கணவர் அருகில் இருந்த கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றதாகவும், அப்போது மூன்று பேர் தன்னை கடத்திச் சென்று அருகில் இருந்த தங்கும் விடுதியில் அடைத்து வைத்ததாகவும், தன்னைத் தேடிவந்த கணவரை அடித்து விரட்டிய அந்த கும்பல், இரவு முழுவதும் தங்கும் விடுதியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

காலையில் தங்கும் அறையில் இருந்து தப்பி வெளியே வந்து தனது கணவரை சந்தித்து நடந்ததைக் கூறி, கணவருடன் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, போலீசார் புகாரை வாங்க மறுத்து விரட்டி அடித்ததாகவும் கூறிய அவர், வேறுவழியின்றி சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

மேலும், அந்த மர்ம கும்பல் செய்த சித்திரவதையால் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அதனால் மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார் அந்தப் பெண்.

இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

பழனி போலீஸார் மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை காவல்நிலையத்திற்கு அழைத்தும் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக ஆளும் தமிழகத்தில் பழனி கோயிலுக்கு கனவருடன் வந்த கேரளாவைச் சேர்ந்த 40-வயதுப் பெண்ணை அவரது கணவரைத் தாக்கிவிட்டு ’மர்ம நபர்கள்’ அந்தப் பெண்ணைக் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்… இது குறித்த செய்தி, தேசிய ஊடகங்களிலும், கேரள ஊடகங்களிலும் வெளியான நிலையில், இந்தக் கொடூரமான செய்தியை தமிழக ஊடகங்கள் ஏன் இதுவரை வெளியிடவில்லை..? என்ற கேள்வி சமூகத் தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து கேள்வி எழுப்பும் பலரும், தமிழக ஊடகங்களால் கலர் கலர் ரீலாக உருட்டப்பட்டு உருவான விடியல் ஆட்சிக்கு களங்கம் வந்துவிடும் என்பதால் இந்தச் செய்தியை விவாதிக்காமல் மறைத்தார்களா..? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

  • பழனி காவல்துறையில் புகார் அளித்தும் வழக்குகூடப் பதிவு செய்யவில்லை என்கின்றன கேரளா ஊடகங்கள்!
  • எதற்காக இந்தச் செய்தி தமிழக ஊடகங்களால் மறைக்கப்பட்டது? எதற்காக காவல்துறை வழக்குகூட பதிவு செய்ய மறுத்தார்கள்?
  • யாருக்காக இந்தச் செய்தி தமிழக ஊடகங்களால் மூடி மறைக்கப்படுகிறது..?
  • இதுவே உத்தரப் பிரதேசத்தில் நடந்திருந்தால் தமிழக ஊடகங்கள் ஒரு வாரம் விவாதம் நடத்தியிருக்குமே!
  • தமிழக ரெட்லைட் காட்சி ஊடகங்களால் ஊதி உருவாக்கப்பட்ட விடியல் ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பதால் இதில் பங்குதாரர்களான முன்களப் பணியாளர்கள் பதுங்குகிறார்களா? – என்று கேள்விகளை எழுப்புகின்றனர்.
ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இந்தக் கொடூர சம்பவத்தை செய்த அந்தக் கேவலமான பாலியல் குற்றவாளிகளைவிட கேவலமானவர்கள் இந்தச் செய்தியை மூடிமறைத்த தமிழக ஊடக முன்களப்பணியாளர்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, பழனி முருகன் கோயிலுக்கு வந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவத்துக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது டிவிட்டர் பதிவில் கண்டனம் வெளியிட்டார். அதில்…

1. பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி  வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக  வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன!

2. கேரள பெண்ணின் கணவனை அடித்துத் துரத்தி விட்டு, அங்குள்ள விடுதிக்கு கடத்திச் சென்று இந்தக் கொடுமையை அந்த  கும்பல் செய்திருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்ட பெண் கேரளத்தில் கண்ணூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்!

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

3. அதைவிடக் கொடுமை தமக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில்  அப்பெண் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர் என்பது தான். இதுபற்றி தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார்!

4.  தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

Related articles

Recent articles

spot_img