என் அம்மாவ எழுப்பாதே.. தட்டிவிடும் குட்டிக் குரங்கு!

அடடே... அப்படியா? சற்றுமுன்
IMG 20211212 134957 - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

தற்போது இரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இது குரங்குகளின் லூட்டி பற்றிய ஒரு வீடியோக்களாகும்.

இந்த வீடியோக்களில் இரு குரங்குகள் செய்வதைப் பார்த்தால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த வேடிக்கையான வீடியோக்களை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இதை லைக் செய்துள்ளனர்.

வைரலாகி வரும் முதல் வீடியோவில், ஒரு குரங்கு அதன் குழந்தைக்கு பால் ஊட்டிக்கொண்டு இருக்கிறது. அப்போது அங்கு மற்றொரு குரங்கு வருகிறது. ஏற்கனவே உள்ள குரங்கை இந்த குரங்கு பாடாய் படுத்துகிறது.

பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக, அந்த குரங்கின் மீது ஏறி அதன் தலையின் மீது அமர்கிறது. நாம் இந்த வீடியோவில் அடுத்து காணும் விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.பெண் குரங்கின் மேல் அமர்ந்த இந்த குரங்கு அதன் உதடுகளில் முத்தமிடுகிறது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

தற்போது வைரல் ஆகி வரும் மற்றொரு வீடியோவும் குரங்குகள் பற்றியது. இதில், ஒரு குரங்கு தனது குட்டிக் குழந்தையின் அருகில் வசதியாக படுத்திருக்க,

அப்போது அங்கு வரும் மற்றொரு குரங்கு அதை சீண்டுகிறது. ஆனால், அந்த குரங்கின் குழந்தை தன் தாயின் தூக்கம் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள சீண்டும் குரங்கை எதிர்த்து நிற்கிறது. இந்த கியூட்டான வீடியோ பார்க்க அற்புதமாக இருக்கிறது.

இரண்டு வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் monkeyjungleclub என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இரு வீடியோக்களுக்கும் நெட்டிசன்களின் (Netizens) மகத்தான ஆதரவும், லைக்குகளும் கிடைத்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.