சரித்திரத்தின் மிகக் கொடூரமான காலகட்டம் என்று அதை சொல்லலாம். மருதுபாண்டியர்களையும் அவரைச் சார்ந்த 600 பேர்களையும் 214 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு கொன்றது இன்றுதான்.

 
4.bp.blogspot.com 7AC z5uBvXA Vip OjbsU5I AAAAAAAAGKE MocG8Ns8RLE s400 20151023 232848 1 - 2026

மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்ட இடம் இந்தக் கோட்டை. இதைப் பற்றி விரிவான கட்டுரையை ‘ஹாலிடே நியூஸ்’ இதழில் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதினேன். அதை அவர்களின் நினைவு நாளான இன்று வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்காததால் அதை தட்டச்சு செய்து பதிவிட முடியவில்லை. 
 
அப்போதெல்லாம் நான் எழுதும் கட்டுரைகள் சிலவற்றுக்கு புகைப்படம் மட்டுமல்லாமல் வீடியோவும் எடுத்துவிடுவேன். அந்த வீடியோவை கட்டுரையின் இறுதியில் ‘க்யூ.ஆர்.கோடாக’ கொடுத்து, ஸ்மார்ட் மொபைல் மூலம் ஸ்கேன் செய்து பார்க்கும் விதமாக செய்துவிடுவோம். இதன் மூலம் மொபைலில் நாங்கள் பார்த்த இடங்களை வாசகர்களும் பார்க்கும் வசதியை செய்து கொடுத்திருந்தோம்.

 

அப்படி இந்த கட்டுரைக்காக நான் எடுத்த வீடியோவை மட்டும் இங்கு கொடுக்கிறேன். மற்றொரு நாளில் கட்டுரையை வெளியிடுகிறேன். இப்போது மருதுபாண்டியர்களை கைது செய்த சங்கரபதிக் கோட்டை பற்றிய வீடியோ.  
 
பின்னணிக் குரல்கள் நானும் எனது மகளும்.  
 
 
 
 
ரெசல்யூசன் மிகக் குறைவாக இருந்தால்தான் மொபைலில் விரைவில் டவுன்லோடாகும் என்று வீடியோ எடிட் செய்பவர் வேறு பார்மேட்டுக்கு மாற்றியதால் வீடியோவின் தரம் சுமாராகத்தான் இருக்கும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். எங்களது குரல்கள் கூட மொபைலில் பதிவு செய்து சேர்த்ததுதான். பாருங்கள் கருத்திடுங்கள். 
ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending