பராசக்தி: ‘இருட்டடிப்பு செய்யப்பட்ட கருணாநிதி’

Published:

 

4.bp.blogspot.com vCHq7XgR4KA VV96hCOp0bI AAAAAAAAERk jMZpKcgqVv0 s400 Karunanidhi - 2026
மு.கருணாநிதி
சென்ற தலைமுறை சினிமா ரசிகர்களை கேட்டுப் பாருங்கள், நடிப்பு என்றால் சிவாஜி என்பார்கள். வசனம் என்றால் கருணாநிதி என்பார்கள். ஆனால், அந்த கருணாநிதியின் பெயரையும் இருட்டடிப்பு செய்த காலம் ஒன்றுண்டு. 
 
1940-களின் மத்தியில் ஏ.வி.மெய்யப்பசெட்டியாரின் சினிமா தயாரிப்புகள் பெரும் வெற்றி பெற்று வந்தன. அந்த காலத்தில் அவரின் படங்களை விநியோகம் செய்து வந்த பி.ஏ.பெருமாள் மெய்யப்பருடன் சேர்ந்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 
 
 
அதே நேரத்தில் தேவி நாடக சபா நடத்தி வந்த ‘பாரசக்தி’ நாடகம் புகழின் உச்சத்தில் இருந்தது. வசூலில் சினிமாவை எல்லாம் பின்னுக்கு தள்ளி, அள்ளிக் குவித்தது. இந்த நாடகத்தை எந்த ஊரில் நடத்தினாலும், அந்த ஊரின் சினிமா வசூல் படுத்தது. 
 
இப்படி மக்கள் அலைமோதும் அளவிற்கு அந்த நாடகத்தில் என்ன இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளவதற்காக மெய்யப்ப செட்டியாரும் பெருமாளும் கடலூருக்கு சென்று ‘பராசக்தி’ நாடகத்தைப் பார்த்தனர். நாடகம் பிடித்துவிட்டது. 
 
3.bp.blogspot.com sQX2Z5hnjlg VV9 - 2026
ஏ.வி.மெய்யப்பன் செட்டியார்
உடனே, நாடகத்தை எழுதிய பாலசுந்தரத்தைப் பார்த்து விலைபேசி, நாடகத்தை வாங்கி, பெருமாளுக்கு கொடுத்தார் செட்டியார். படத்தை அண்ணாதுரை கதை எழுதிய ‘நல்லதம்பி’ திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சுவை கொண்டே ‘பாரசக்தி’ படத்தையும் இயக்கச் சொன்னார்.
 
அண்ணாதுரையைப் போலவே ஒன்றிரண்டு படங்களுக்கு வசனம் எழுதி வந்த மு.கருணாநிதியை படத்துக்கு வசனம் எழுத வைப்பது என்று முடிவு செய்தனர். 
 
படத்தின் ஹீரோவாக கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்க செட்டியார் விரும்பினார். ஆனால், பெருமாளோ வேறு விதமாக சிந்தித்தார். அவர் செட்டியாரிடம் “நாம் ஏன் ஒரு புது நடிகரை போடக்கூடாது?” என்றவர் கூடவே “வேலூர் சக்தி நாடக சபாவில் நடந்து வரும் ‘விதி’ நாடகத்தைப் பார்த்தேன். அதில் கணேசன் என்ற ஒரு பையன் பிரமாதமாக நடிக்கிறான். அவனையே ‘பராசக்தி’யில் ஹீரோவாக போட்டால் என்ன..!” என்றார். 
 
அப்போது ‘விதி’ நாடகம் திண்டுக்கல்லில் நடந்துக் கொண்டிருந்தது. செட்டியார் அங்கு சென்று நாடகத்தை பார்த்துவிட்டு திரும்பி வந்தார். என்னவோ அவருக்கு புது நடிகரை நடிக்க வைப்பதில் உடன்பாடு இல்லாமலே இருந்தது. 
 
“சினிமா என்பது வேறு. நாடகத்தில் நடிப்பதென்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லை. அப்படிப்பட்ட ஒருவரை நடிக்க வைத்து படம் தோல்வியடைந்தால் என்ன செய்வது? இது நீங்கள் என்னுடன் கூட்டுச் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம் வேறு. புதுப் பையனெல்லாம் வேண்டாம். ஏற்கனவே நடித்து வருபவர்களை வைத்தே படம் எடுப்போம். எதற்கு ரிஸ்க்?” என்றார்.
 
பெருமாள் விடுவதாக இல்லை. “ரிஸ்க் எடுப்போம்! கணேசனையே நடிக்க வைப்போம். அவன் பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்..!” என்று பிடிவாதமாக இருந்தார்.
 
செட்டியார் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டார். 
 
‘பராசக்தி’ படபிடிப்பு தொடங்கியது. சுமார் 3,000 அடி படம் எடுத்தப் பின், அதுவரை எடுக்கப் பட்ட படத்தை செட்டியாருக்கு போட்டுக் காட்டப்பட்டது. 
 
படத்தைப் பார்த்த செட்டியாரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. “இந்தப் பையன் தமிழ்நாட்டுக்கே பெரும் புகழ் சேர்ப்பான். இவனே தொடர்ந்து நடிக்கட்டும்.” என்றார். 
 
3.bp.blogspot.com E6jk6rIOQ10 VV97 DJOXgI AAAAAAAAER4 ulrKQj kYfo s640 vlcsnap2011090921h09m33 - 2026
‘பராசக்தி’யில் சிவாஜி கணேசன் 
‘பராசக்தி’ 1952, அக்டோபர் 17-ல் ரிலீசானது. தமிழ் சினிமாவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படமாக அது மாறியது. சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிப்பு சகாப்தம் உருவானது. 
 
படத்திற்கு கருணாநிதி எழுதிய வசனம் பட்டிதொட்டிகளில் எல்லாம் படு ஹிட். வசனம் என்றாலே அது கருணாநிதிதான் என்ற புது டிரெண்ட் தோன்றியது. 
 
இப்படி பெயர் பெற்ற கருணாநிதிக்கும் சினிமா துறைக்கே உள்ள இருட்டடிப்பு அனுபவம் ஏற்பட்டுள்ளது. அது ‘அபிமன்யு’ படத்தின் மூலம் கிடைத்தது. 1948-ல் அந்தப் படம் ரிலீசானது. படத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதி முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று பார்த்தார். 
 
4.bp.blogspot.com - 2026
‘அபிமன்யு’ படத்தில் எம்.ஜி.ஆர்
தனது பெயர் வரும் என்று ஆவலோடு காத்திருந்தபோது திரைகதை, வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று வந்தது. தனது பெயருக்குப் பதில் அன்றைக்கு பிரபலமாக இருந்த ஒருவரின் பெயர் வந்திருப்பதைக் கண்டு, படத்தின் தயாரிப்பாளரான ஜுபிடர் சோமுவிடம் போய் கேட்டார். அதற்கு அவர், “உன் பெயரும் பிரபலமாகட்டும், அதுவரை பொறு!” என்றார். 
 
வசனத்திற்காகவே பின்னாளில் மிகப் பெரும் புகழ் பெற்ற கலைஞர் கருணாநிதிக்கே ஆரம்ப காலங்களில் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு சேதி! 

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img