லிங்கத் தத்துவம்; நவீன பார்வையில்!

ஆன்மிகக் கட்டுரைகள் ஆன்மிகம் உரத்த சிந்தனை

ஆணுருப்பும் பெண்ணுருப்பும் கொண்ட உருவமே சிவலிங்கம் என அவதூரு பரப்பும் 
சிறுமனம் கொண்ட பெரியோர்களே சற்று சிந்தித்துத் தெளிவு பெறுங்கள்..

ஆகமத்தை வகுத்தது சிவன்..

ஆகம முறைப்படி உயிர்களின் தலையே கருவரை..
அதிலும் நெற்றியே சிவம் இருக்கும் வெட்டவெளி…
நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு வழியே நுழைந்து சுழிமுனைக்குச் சென்று அங்கிருந்து கீழ்நோக்கி நுரையீரலில் பில்ட்ராகி மூலாதாரம் சென்று அங்கிருந்து இதயம் வந்து மீண்டும் சுழிமுனை வழியாக வெளியேறுகிறது.
இந்த காற்றானது உள்ளும் புறமும் சுழிமுனை வழியாக செல்வதன் மூலம் சுழிமுனையிலிருக்கும் ஆன்மாவானது சுழல்கிறது..

( பூமி மற்றும் பிற கோள்களைப் போலவே)

நம்மையும் அறியாமல் மூச்சை இழுத்து சுவாசித்து ஆன்மாவை இயக்கும் அந்த சக்தியே கடவுள்.

சீவனை இயக்குவதால் சிவன் என சித்தர்கள் பெயர் சூட்டினர்.

இந்தசுழி முனையை சிவம் எனவும் அதற்கு கீழ்பகுதி லிங்கமெனவும் லிங்கம் உள்ள அடிப் பகுதி ஆவுடையார் எனவும் சித்தர்கள் ஆராய்ந்து கூறினர்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

அதாவது கீழ் தாடை மற்றும் மேல் தாடை ஆவுடையார் என்றும் தொண்டைக் குழியில் உள்ளே உள்ள உள் நாக்கு ஆவுடையாரில் பதிந்திருக்கும் லிங்க பாகம் . இதை வாய்க்குள் நம்மால் பார்க்க முடியும்.

அதே நாக்கானது மேல் நோக்கியும் அதே அளவு குவிந்திருக்கும். அதுவே அன்னாக்கு. (அண்ணாமலை) நம்மால் வெளியில் அதைக் காண முடியாது. அதைத்தான் லிங்கமாக (மஹாதேவராக) ஆவுடையாரின் மீது காண்கிறோம்.

அதன் மீதினிலிருந்து இயக்கும் சுத்த வெளியே நெற்றிப்பொட்டினுள் காற்று உள் செல்லும் மூக்கின் கடைசிபகுதியும் தொண்டைக்குழிக்கு மேல் சேரும் இடமே சுத்த சிவம்.

ஆகமமும் இதையே தெளிவுபடுத்துகிறது. சித்தர்களும் ஆராய்ந்து உருவாக்கியதே சிவன் உறையும் லிங்கத் திருமேனி..

இதனாலேயேதான் கருத்தையும், சிந்தையையும், தியானத்தையும் நெற்றிப்பொட்டு எனப்படும் சுழிமுனையில் வை என சான்றோர்கள் கூறினர்.

எண்ணாயிரத்தாண்டு யோகம்  இருக்கினும்
கண்ணாணார் அமுதினைக கண்டறிவாரில்லை
உண்ணாடிக்குள்ளே ஒளியுற நோக்கினால்
கண்ணாடிபோலக் கலந்து நின்றானே…

நாட்டமும் இரண்டும் நடு மூக்கினில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கு அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவனாமே..

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

திருமூலர்…

அறியாத சிறுபுத்தியுடையோரே இனியேனும் லிங்கத் திருமேனியை அவதூறாகப் பேசாதீர்…

சிவசிவ சிவமே சிவசிவ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.