முடுவார்பட்டி ஸ்ரீ வேலவன் திருக்கோவில் மார்கழி உத்ஸவ விழா!

Published:

vilakku pooja at madurai alankanallur - 2026

முடுவார்பட்டி ஸ்ரீ வேலவன் திருக்கோவில் மார்கழி உத்ஸவ விழா!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி அம்மை, தெய்வானை அம்மை, உடனாகிய ஸ்ரீ வேலவன் திருக்கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற உற்சவ விழாவில் முதல் நாளில் பக்தர்கள் வக்கீல் ஊத்துக்கு சென்று தீர்த்தமாடி வருதல், அன்று இரவு உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தென்காசி மாவட்டம் சுரண்டை சத்யா செல்வின் குழுவினரின் கிராமிய வில்லிசை கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் நாளில் முருகப்பெருமான் பூப்பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அன்று இரவு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. பின்னர் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட அன்னதான விழா நடந்தது. பின்னர் பழனிமலை முருகனை காண 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை நிகழ்வு நடைபெறுகிறது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

விழா ஏற்பாடுகளை முடுவார்பட்டி வேலவன் திருப்பணி குழு மற்றும் பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

திருவோண நட்சத்திரம் சிறப்பு பூஜை!

மதுரை அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில்,
திருவோண நட்சத்திரம் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில், லட்சுமி ஹயக்கீரிவருக்கு அர்ச்சணை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் செய்து இருந்தனர்.

ஐயப்பன் ஆலய மகா கும்பாபிஷேகம்

மதுரை உசிலம்பட்டி அருகே, புதியதாக கட்டப்பட்ட அருள்மிகு ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் பழமையான அருள்மிகு கணவாய் ஐயப்பன் திருக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் தொடங்கி, முதல் கால யாகசாலை பூஜை மற்றும் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

அதனைத் தொடர்ந்து , கணவாய் ஐயப்பன் திருக்கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார் ஹரிஹரன் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அங்குள்ள கன்னி மூல கணபதி மற்றும் சிவன், முருகன் ஆகிய சிலைகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு பூஜைகள்
நடைபெற்றது. இதில் , ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related articles

Recent articles

spot_img