மியான்மரில் மண்சரிவு ! உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 !

உலகம் பொது தகவல்கள்

miyanmar - 2026மியான்மரில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு ஊர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மியான்மரின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாகாணத்தின் மலைப்பகுதியில் உள்ள தாப்யோ கோன் கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து 28 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், 22 பேர் உயிரிழந்தனர். தற்போது மேலும் 34 உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்த12,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும், முகாம்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 38,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.