simbu

சிம்பு என்றாலே படப்பிடிப்பிற்கு சரியாக வரமாட்டார் என்கிற பொதுவான கெட்டப்பெயர் அவருக்கு உண்டு. ஆனால், சமீபகாலமாக அவர் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

குண்டாக இருந்த தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் 25 நாளில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.  இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளிக்கு வெளியாகும் எனவும், பொங்கலுக்கு படம் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை.

மேலும், ஈஸ்வரன் முடித்த கையோடு, உடனடியாக மாநாடு படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார் சிம்பு. இது தொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும், இப்படத்தில் தனது பெயர் அப்துல் காலிக் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைக்கண்ட சிம்பு ரசிகர்கள்  உற்சாகம அடைந்துள்ளனர்.

 
Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending