தொழில்நுட்ப கோளாறு காரணமாக டுகாட்டி பைக்குகளை திரும்ப பெறும்: டுகாட்டி இந்தியா

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் மற்றும் சூப்பர் ஸ்போர்ட் எஸ் வகைகளில், 1,462 யூனிட்களை திரும்ப பெற உள்ளதாக டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டுகாட்டி பைக்கின் மேற்பரப்பில் தீ ஏற்பட்டதை தொடர்ந்து இந்த வாகனங்களை திரும்ப பெற டுகாட்டி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த பைக்கில் ஏர்பாக்ஸ் ப்ளோ-பை  மற்றும் எரிபொருள் டெங்க் ஓவர்-பில் ஹோஸ் ஆகியவை எக்ஸ்ஹாஸ்ட் மெயின்-ப்போல்டு-க்கு மிகவும் அருகில் இருப்பது போன்று உருவாகப்பட்டுள்ளது. இதுவே பைக் தீ பிடிக்க காரணமாக அமைந்திருக்கலாம் என்று டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெவ்வேறு நாடுகளில் இந்த பைக் தீ பிடித்த சம்பவங்கள் மூன்று இடங்களில் நிகழ்ந்துள்ளது உண்மை தான். டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் பைக்களின் ஓனர்கள் ஹோஸ்கள் தீ பிடித்துள்ளதா? ரப்பர் தீ பிடித்து எரியும் வாடை வீசுகிறதா? என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சில டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் மாடல்களில் பிரச்சினை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனாலும், இந்த பிரச்சினையால் எத்தனை பைக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன என முழுமையாக இன்னும் தெரியவில்லை என்று டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி செர்கி கானோவாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிரச்சினைக்குரிய பைக்குகளை திரும்ப பெறும் அறிவிப்பு சமீபத்திலேயே வெளியாகியுள்ளது. பைக்குகள் திரும்ப பெறுவது குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மற்றும் இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பைக்குகளில் திரும்ப பெறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு, எதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்த விளக்கும் அளிக்கப்பட உள்ளது என்று டுகாட்டி இந்தியா தெரிவித்துள்ளது.

பைக்களை திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பிரச்சினை உள்ள டுகாட்டி சூப்பர்ஸ்போட் பைக் உரிமையாளர்களுக்கு பைக்குகளில் உள்ள பிரச்சினைகள் இலவசமாக சரி செய்யப்படும். பிரச்சினைக்குரிய ஏர்பாக்ஸ் புளோ-பை ஹோஸ் மற்றும் ப்யூல் டெங்க் ஓவர்-பில் ஹோஸ் ஆகியவை மறுசீரமைப்பு மற்றும் அவைகள் எலக்ட்ரிக் வயரிங் முன்பு பொருத்தப்படும். இதன் இந்த ஹோஸ்கள் எக்ஸ்ஹாஷ்ட் மெயின்-ஃப்லோடு உடன் கனெக்ட் ஆவது தவிர்க்கப்படும்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ள பைக்குகள் இத்தாலியின் பொலோக்னா தயாரிக்கப்பட்டவை என்றும், இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள பைக்குகள் தாய்லாந்து தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரிய வந்துள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.