kajal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் மாலத்தீவிற்கு தேனிலவு சென்றார். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

சினிமாவை பொறுத்தவரை அவர் இந்தியன் 2, துல்கார் சல்மானுடன் ஒரு படம், மேலும் மும்பை சகா எனும் ஒரு பாலிவுட் திரைப்படம் ஆகியவற்றில் நடித்து வந்தார்.

deekay

இந்நிலையில், தமிழில் யாமிருக்க பயமேன், காட்டேறி ஆகிய படங்களை இயக்கிய தீக்கேவின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடிக்கவுள்ளார். காஜல் அகர்வால் மற்றும் அவரின் கணவருடன் தான் நிற்கும் புகைப்படத்தை தீக்கே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending