சகுந்தலா தேவிக்கு பிறகு… மற்றுமொரு ‘சேலஞ்சிங் பயோபிக்’!

அடடே... அப்படியா? சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
vidyabalan2
vidyabalan2

பாலிவுட் திறமைசாலியான நடிகை வித்யாபாலன் வரிசையாக சேலஞ்சிங் படங்களில் நடித்து வருகிறார். இதற்குமுன் என்டிஆர் பயோபிக் கில் அவர் மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தெலுங்கு சம்பிரதாயங்களான புடவைக் கட்டு மற்றும் கலாச்சாரத்தில் நந்தமூரி அபிமானிகளை ரசிகர்களை வித்யாபாலன் மெய்மறக்கச் செய்தார். அதற்கு முன் ஐட்டம் கேர்ள் விஜயலட்சுமி என்னும் சிலுக்குசுமிதா பாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒவ்வொரு முறையும் வித்யாபாலன் எந்த பிரயோகம் செய்தாலும் அது ரசிகர்களை சென்று சேர்கிறது. ஹாட் டாபிக் ஆகிறது. தன்னில் உள்ள சிறந்த நடிகையை திருப்திப்படுத்தும் முயற்சியாலேயே இது சாத்தியமாகிறது. அதனால் தான் பாலிவுட்டில் எத்தனை போட்டி இருந்தாலும் முதல் இட நடிகைகளுக்குள் சேலஞ்சர் ஆக வித்யா பாலன் உயர்ந்துள்ளார்.

vidyabalan1
vidyabalan1

வித்யா பாலன் தன் கேரியரில் மற்றுமொரு சேலஞ்சிங் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கை கதையில் நடிப்பதற்கு ஏற்பாடுகளில் உள்ளார். இந்தப் படத்தை ஆவர் கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்க உள்ளார்.

அனைத்தும் சரியாக அமைந்தால் இப்போது இந்த மூவி தொடங்கி விட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கொரோனா நோய்த்தொற்று லாக்டௌனால் இதெல்லாம் வாய்தாவாகி விட்டது. இதற்கு துணையாக இந்திரா காந்தி வாழ்க்கை மீது நிறைய ரிசெர்ச் செய்ய வேண்டியுள்ளது. ஸ்கிரிப்ட் ரெடி ஆவதற்கு தாமதமாகியதற்கு காரணம் என்று வித்யாபாலன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வரும் ஆண்டில் இந்த திரைப்படம் தொடங்குவோம் என்று கூட குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.