தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் )தயாரிப்பில்  இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை”.

சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய “ லாக்கப் “ என்ற நாவலை தழுவி இந்த இந்த படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை இன்று பார்த்த  உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் வெற்றிமாறனையும் தயாரிப்பாளர் தனுஷையும் நெகிழ்ந்து பாராட்டினார். விசாரணை படத்தை பற்றி பேசிய கமல் ஹாசன், “நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிமாறனின் மனதில் பதித்துச்சென்ற என் பாலுமஹேந்திராவிற்கு நன்றி, நேற்று விசாரணை படம் பார்த்து வியந்தேன், என்றார்.

இந்த படத்தை உலகமுழுவதும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending