இன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக, இசை உலகில் கொடிக் கட்டி பறக்கும் அனிருத் தொடர்ந்து வெற்றி படங்களில் பணி புரிந்து வருகிறார்.

சமீபத்தில் காதலர் தினத்தன்று வெளி ஆன அவரது ஆல்பம் ஒன்றும் இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் இப்போது நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா, ஆகியோர் நடிக்க பி. வம்சி இயக்கும், கோபி சுந்தர் இசை அமைக்கும், பி வி பி சினிமா தாயாரிக்கும் ‘தோழா’ படத்தில் டைட்டில் பாடல் ஒன்றை பாடி உள்ளார்.

‘தோழா’ இரு வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வரும் இரு நண்பர்களை பற்றியக் கதை. அந்த நட்பை பிரதிபலிக்கும் பாடல் ஒன்றை தலைப்பு பாடலாக பதிவு செய்ய எண்ணினோம். அந்தப் பாடலை இளைஞர்களிடம் பிரபலமான அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குனரும், இசை அமைப்பாளரும் முடிவெடுத்தார்கள்.

உடனே அனிருத்தை அணுகினோம், அவரும் சற்றும் தயக்கம் இன்றி ஒப்புக் கொண்டார். ‘தோழா என் உயிர் தோழா’ என்று துவங்கும் இந்தப் பாடல், இனி வரும் காலங்களில் தோழமையை குறிக்கும் பாடலாக இருக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம்.

‘தோழா’ படத்தில் பாடல்கள் மிக மிக இனிமையாக வந்து இருக்கிறது. இந்த மாதம் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் இசை வெளியீட்டு விழா நடை பெற உள்ளது’ என பெருமிதத்துடன் கூறினார் பி வி பி சினிமா, ராஜீவ் காமினேனி.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending