மாவு தலை… துரத்தும் விஜய் ரசிகர்கள், நொந்து போன அஜித் ரசிகர்கள்

ajith10சமீப காலமாக அஜித் தன்னுடைய படங்களில் சால்ட் ஆன்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த கெட்டப்பையே தொடர்ந்து வந்தார் அஜித். ஆனால் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் அஜித்தின் கெட்டப்பை மாவு தலை என்று கிண்டல் செய்ய விஜய் ரசிகர்கள் இதை விடாமல் பிடித்து கொண்டனர். இது போததென்று பாலிவுட் நடிகர் கமால் கானும் அஜித்தை பார்த்தால் வயசான காவலாளி போல் இருக்கிறார். அவரை எப்படி தென்னிந்திய மக்கள் ஏற்று கொண்டார்கள்… என்று தனது டுவிட்டரில் தெரிவிக்க இதுபோதாத விஜய் ரசிகர்களுக்கு… சின்ன புள்ளி வைத்து கொடுத்தாலே அதில் பெரிய ரோடு போட்டு விடுவார்கள். ஆனால் இவர்கள் பெரிய கோடே போட்டு கொடுத்து விட்டார்கள். இதனால் மாவு தலை என்ற புதிய வலைதளப் பக்கத்தையே தொடங்கி விட்டனர் விஜய் ரசிகர்கள். சமூக வலைதளங்களில் தொடர்ந்து கிண்டல் செய்யவதால் நொந்து போய் விட்டனர் அஜித் ரசிகர்கள். இதனால் அவர்கள் தற்போது அஜித்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இனி சால்ட் ஆன்ட் பெப்பர் லுக்கில் நடிக்காமல் டை அடித்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அஜித் தனது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.