சென்னை: நடிகர் சாந்தனுவுக்கும், நிகழ்ச்சித் தொகுப்பாளினி கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதை இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எங்கள் மகன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. எங்கள் மகள் சரண்யா சற்று பொறுத்திருந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால், வீட்டின் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்கவுள்ளது. நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் மகள் கீர்த்தியே மணப்பெண். வரும் ஆகஸ்ட் 21ஆம் நாள் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. 22ஆம் நாள் மாலை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வும் நடைபெற உள்ளது” என்று கூறியுள்ளார்.
நடிகர் சாந்தனு, தொகுப்பாளினி கீர்த்திக்கு ஆக.21ல் திருமணம்
சென்னை: நடிகர் சாந்தனுவுக்கும், நிகழ்ச்சித் தொகுப்பாளினி கீர்த்திக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதை இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எங்கள் மகன் சாந்தனு என்கிற சோனுவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. எங்கள் மகள் சரண்யா சற்று பொறுத்திருந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால், வீட்டின் முதல் திருமணம் சாந்தனுவுக்கு நடக்கவுள்ளது. நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் மகள் கீர்த்தியே மணப்பெண். வரும் ஆகஸ்ட்…
1–2 minutes



Leave a Reply