மாணவிகளுக்கு ஆசிரியர் காட்டிய படம்! அப்பறம் மாமியார் வீடுதான்…

Published:

saranga pani - 2026

ஒரத்தநாடு அடுத்துள்ள ஊர் திருவோணம். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியராக வேலை பார்ப்பவர்தான் சாரங்கபாணி. சங்கரன்கோவிலை சேர்ந்தவர். வயது 30 ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை.

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ , மாணவிகளுக்கு பாடம் எடுத்துவந்தார். இவர் மீது 3 மாதத்துக்கு முன்பு ஒரு பாலியல் புகார் வந்தது. புகார் அளித்தது, இவரிடம் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்தான்.

ஆனால் அதிகாரிகளோ இதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என்றும், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு அரசு பள்ளிக்கு இவரை பெயரளவில் டிரான்ஸ்பர் செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், திரும்பவும் இதே திருவோணம் பள்ளிக்கு சாரங்கபாணி நேற்று வந்துவிட்டார்.

யாரை பிடிச்சு டிரான்ஸ்பர் வாங்கினாரோ தெரியவில்லை.. இதே ஆசிரியர் பள்ளிக்கு வந்துவிடவும் மாணவிகளுக்கு திக் திக் என்று ஆகிவிட்டது. பெற்றோர்களோ ஆத்திரம் வந்து பள்ளி முன்பு ராத்திரி 10 மணி வரை போராட்டமே நடத்தினர்.

காவல்ட்துறையினர் பெற்றோர்களை சமாதானப்படுத்தினார்களே தவிர, பிரச்சனைக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் துணிந்து ஒரு மாணவி புகார் தந்தாள். “சாரங்கபாணி சார், எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச படம் காட்டி தொல்லை பண்றாரு” என்று பரபரப்பு புகார் சொல்லவும் பட்டுக்கோட்டை மகளிர் காவல்துறையினர் இந்த விஷயத்தை கையில் எடுத்தனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

இப்போது, இந்த ஆபாச வாத்தியார் சாரங்கபாணி போக்சோவில் கைதாகி உள்ளார். இதைதவிர, அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதுரை இன்னொரு புகார் தந்துள்ளார்.

தவறுகளை தட்டி கேட்டதால், சாரங்கபாணி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் கூறியுள்ளார். ஆக மொத்தம், 2 புகார்களில் காவ்ல்துறையினர் தனித்தனி வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img