exam 2

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளித் பொதுத்தேர்வுகள் முழுமையாக நடைபெறவில்லை. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன.

இதனால் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ், இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்கின்றனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

அதன்பிறகு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending